மதுக்கடைக்கு எதிரான போராட்டம்: 70 பேர் மீது வழக்கு: கடையடைப்பு

அரியலூர் அருகே டாஸ்மாக் கடையை சூறையாடியதாக 40 பெண்கள் உள்பட 70 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதை திரும்பப் பெறக் கோரி

அரியலூர் அருகே டாஸ்மாக் கடையை சூறையாடியதாக 40 பெண்கள் உள்பட 70 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதை திரும்பப் பெறக் கோரி ஆர்.எஸ்.மாத்தூர் மற்றும் ஈச்சங்காட்டில் வெள்ளிக்கிழமை கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது.
ஆர்.எஸ்.மாத்தூர் மற்றும் ஈச்சங்காடு கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளால் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படுவதாகவும், அவற்றை உடனடியாக அகற்றுமாறும் அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால், மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், அங்குள்ள 2 மதுக்கடைகளின் பூட்டை உடைத்து, உள்ளே இருந்த மதுபான பாட்டில்களை வெளியே எடுத்துவந்துப் போட்டு அடித்து நொறுக்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
டாஸ்மாக் கடையை சூறையாடி, ரூ. 12 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்களை சேதப்படுத்தி, அரசுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியதாக 40 பெண்கள் உள்பட 70 பேர் மீது தளவாய் போலீஸார் வியாழக்கிழமை வழக்குப் பதிவுசெய்தனர்.
இதைக் கண்டித்து ஆர்.எஸ்.மாத்தூர் மற்றும் ஈச்சங்காடு பகுதிகளில் கடையடைப்பு போராட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பல்வேறு கட்சியினர் மற்றும் அமைப்பினர் தங்கள் ஆதரவை தெரிவித்து, போராட்டம் நடத்திய பெண்கள் மீது போடப்பட்ட வழக்கை திரும்பப் பெறவேண்டும் என கோரிக்கைவிடுத்துள்னர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com