வண்டல் எடுக்க எதிர்ப்பு: கிராம மக்கள் மறியல்

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே ஏரியில் மேலூர் மக்கள் வண்டல் மண் எடுக்க எதிர்ப்பு தெரிவித்து கீழவெளி, கைகளத்தூர் கிராம மக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே ஏரியில் மேலூர் மக்கள் வண்டல் மண் எடுக்க எதிர்ப்பு தெரிவித்து கீழவெளி, கைகளத்தூர் கிராம மக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
உடையார்பாளையம் அருகே தத்தனூர் ஊராட்சிக்கு உட்பட்ட பொன்னப்பன் ஏரியில் கீழவெளி, கைகளத்தூர் கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற்று கடந்த சில நாட்களுக்கு முன்பு வண்டல் மண் அள்ளினர். அப்போது அங்கு வந்த மேலூர் கிராம மக்கள் பொன்னப்பன் ஏரி தங்கள் கிராமத்திற்கு சொந்தமானது என்று கூறி அவர்களை தடுத்து நிறுத்தினர்.
இந்நிலையில், மேலூர் கிராம மக்கள், ஜயங்கொண்டம் வட்டாட்சியர் திருமாறனிடம் அனுமதி பெற்று பொன்னப்பன் ஏரியில் வெள்ளிக்கிழமை வண்டல் மண் அள்ளினர்.  
இதையறிந்த கீழவெளி, கைகளத்தூர் கிராம மக்கள், அவர்களை தடுத்து நிறுத்தி தத்தனூர் அருகே திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த ஜயங்கொண்டம் வட்டாட்சியர் திருமாறன் மற்றும் உடையார்பாளையம் போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று, இதுகுறித்து வட்டாட்சியர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தலாம் என கூறியதை அடுத்து, பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com