திருவாரூர், நாகை மாவட்ட வாய்க்கால்களை தூர் வார வேண்டும்

திருவாரூர், நாகை மாவட்டங்களில் மழைநீரில் பயிர்கள் மூழ்கி வீணாவதைத் தடுக்க வாய்க்கால்களை தூர் வார வேண்டும் என்றார் ஜி.கே. வாசன்.

திருவாரூர், நாகை மாவட்டங்களில் மழைநீரில் பயிர்கள் மூழ்கி வீணாவதைத் தடுக்க வாய்க்கால்களை தூர் வார வேண்டும் என்றார் ஜி.கே. வாசன்.
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
தற்போது பெய்துவரும் கனமழையில் திருவாரூர், நாகை மாவட்டங்களில் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளது. இந்தப் பயிர்களைப் பாதுகாக்க உடனடியாக தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். அடுத்த மழையில் பயிர்கள் பாதிக்கப்படாமல் இருக்க வாய்க்கால்களைத்
தூர்வார வேண்டும். மேலும் தண்ணீர் சூழ்ந்துள்ள ஏரிகளுக்கு வடிகால் வசதியை ஏற்படுத்த வேண்டும்.  அரசு அதிகாரிகள் டெல்டா மாவட்டங்களில் பயிர்கள் நீரில் மூழ்கவில்லை எனக் கூறுவது முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல்உள்ளது. தற்போதைய அரசியல் சூழலில், வருமான வரிச் சோதனை மக்களிடையே பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தும் என்பதை மறுப்பதற்கில்லை.  மக்களுக்கு உண்மை நிலையை தெளிவுபடுத்த வேண்டியது அத்துறையின் கடமையாகும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com