வாக்காளர் சுருக்கத் திருத்தப் பணிக்கு நவ.30 வரை கால அவகாசம் நீட்டிப்பு

அரியலூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தப் பணி மேற்கொள்வதற்கு நவம்பர் 30 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் க.லட்சுமிபிரியா தெரிவித்துள்ளார்.

அரியலூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தப் பணி மேற்கொள்வதற்கு நவம்பர் 30 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் க.லட்சுமிபிரியா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
செப்டம்பர் 1 முதல் 30 வரை வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்நிலையில் விண்ணப்பங்களைப் பெறுவதற்கான கால அவகாசம் நவம்பர் 30 வரை நீட்டித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
ஆகவே, தகுதியுடைய நபர்கள் தங்கள் விண்ணப்பங்களை  தங்கள் பகுதிகளிலுள்ள வாக்குச்சாவடிகளில் அளிக்கலாம். மேலும் நவம்பர் 15 முதல் 30 வரை வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாகச் சென்று விடுபட்ட நபர்களைக் கண்டறிந்து விண்ணப்பங்களை அளித்து பெறஉள்ளனர்.
மேலும்  w‌w‌w.‌n‌v‌s‌p.‌i‌n  என்ற இணையதளத்தின் மூலமும்,இ.சேவை மையங்களின் மூலமும் விண்ணப்பிக்கலாம்.  
அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த வாக்காளர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com