சன்னாசிநல்லூரில்  நலத்திட்ட உதவிகள் அளிப்பு

அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டம் சன்னாசிநல்லூர் கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 78 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டம் சன்னாசிநல்லூர் கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 78 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
முகாமுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் சே. தனசேகரன் தலைமை வகித்து, 5 பேருக்கு ரூ. 50,000 மதிப்பிலான விலையில்லா வீட்டு மனைப்பட்டா, 38 பேருக்கு பட்டா மாறுதல் ஆணை, 16 பேருக்கு நத்தம் பட்டா, 3  பேருக்கு ஊனமுற்றோர் உதவித்தொகை ரூ.36,000-க்கான காசோலை, 1 பயனாளிக்கு ஈமச்சடங்கு,இயற்கை மரணம் நிவாரணத்தொகை ரூ.22,500 மதிப்பிலான காசோலை, 1 பயனாளிக்கு விபத்து நிவாரணத் தொகை ரூ.1,00,000-க்கான காசோலை,  4 நபர்களுக்கு வாரிசு சான்று, 1 நபருக்கு உட்பிரிவு சான்று,  8 பேருக்கு ரூ. 9,627 மதிப்பில் மானிய விலையில் வேளாண் இடுபொருள், 1 பயனாளிக்கு ரூ.7,670  மதிப்பில் வேளாண் இடுப்பொருள் என மொத்தம் 78 பயனாளிகளுக்கு ரூ. 2 லட்சத்து 25 ஆயிரத்து 797 மதிப்பிலான நலத்திட்ட  உதவிகளை வழங்கினார்.
பின்னர் அவர் பேசுகையில்,  பொதுமக்களைத்தேடி அரசின் அனைத்து நலத்திட்டங்களும் சென்றடையும் நோக்கத்திலும், அரசின் இதர நலத்திட்டங்கள் அறிந்துகொள்ளும் வகையில் மக்கள் தொடர்பு முகாம் நடத்தப்படுகிறது என்றார்.
துணை ஆட்சியர் பாலாஜி, மாவட்ட வழங்கல் அலுவலர் கதிரேசன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நிலம்) சுரேஷ்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் ஜாகீர்உசேன்  உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 
முன்னதாக உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் ப. டினாகுமாரி  வரவேற்றார். செந்துறை வட்டாட்சியர் தமிழ்ச்செல்வி நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com