சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

அரியலூர் மாவட்டம் ஜயங்கொண்டம் அருகே உள்ள மீன்சுருட்டியில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு மோட்டார் சைக்கிள் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

அரியலூர் மாவட்டம் ஜயங்கொண்டம் அருகே உள்ள மீன்சுருட்டியில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு மோட்டார் சைக்கிள் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.
மீன்சுருட்டி காவல்துறை சார்பில் நடைபெற்ற  இந்த பேரணிக்கு ஜயங்கொண்டம் காவல் துணைக் கண்காணிப்பாளர் கென்னடி தலைமை வகித்து தொடக்கி வைத்தார். காவல் உதவி ஆய்வாளர்கள் முத்துகுமார், திவாகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரணியின் போது தலைகவசம் அணியாமல் மோட்டார்சைக்கிள் ஓட்டகூடாது.  18 வயதுக்குட்பட்ட சிறுவர்களை மோட்டார்சைக்கிள் ஓட்ட பெற்றோர்கள் அனுமதிக்கக் கூடாது. மது அருந்திவிட்டு வகானம் ஓட்டக்கூடாது. மோட்டார் சைக்கிளில் மூன்று பேர் பயணம் செய்யக்கூடாது என்பவைகள்  உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டது. பேரணி ஜயங்கொண்டம் குறுக்குசாலையில் இருந்து புறப்பட்டு நெல்லிதோப்பு, மீன்சுருட்டி கடைவீதி வழியாக சென்று காவல் நிலையம் முன் நிறைவடைந்தது. இதில் போலீஸார் மற்றும் பொதுமக்கள் தலைகவசம் அணிந்து கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com