ஜயங்கொண்டத்தில் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

அரியலூர் மாவட்டம் ஜயங்கொண்டம் பாத்திமா மெட்ரிக் பள்ளியில் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் மற்றும் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

அரியலூர் மாவட்டம் ஜயங்கொண்டம் பாத்திமா மெட்ரிக் பள்ளியில் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் மற்றும் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.
 நிகழ்ச்சிக்கு உதவி தந்தை எடிசன் சின்னப்பா தலைமை வகித்தார். முதல்வர் உர்சலாசமந்தா, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் கே. சண்முகம், அரிமா சங்க வட்டாரத் தலைவர் கே. சிவகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியர் ஜெனிபர்சுகந்தி வரவேற்றார்.
கருத்தரங்கில் ஜயங்கொண்டம் வட்டார நடமாடும் மருத்துவமனை மருத்துவர் சந்திரசேகரன் பங்கேற்று டெங்கு காய்ச்சல் நோய் ஒழிப்பு விழிப்புணர்வு குறித்து பேசினார். மேலும் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற பேரணியை ஜயங்கொண்டம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் உஷா கொடியசைத்து தொடக்கி வைத்தார். பேரணியில் பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்று டெங்கு காய்ச்சல் நோய் தடுப்பு விழிப்புணர்வு கோஷங்கள்எழுப்பியவாறு சென்றனர். மேலும் பொதுமக்களிடையே டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு வாசங்கள் அடங்கிய துண்டுப்பிரசுரங்கள் விநியோகித்தனர்.
பேரணி பள்ளியில் இருந்து புறப்பட்டு தா. பழூர்சாலை, பேருந்து நிலைய சாலை, கடைவீதி வழியாக சென்று மீண்டும் பள்ளியை வந்தடைந்தது.
நிகழ்ச்சிகளில் அரிமா சங்க பொருளாளர் தண்டபாணி, பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com