பருத்தியில் வேர் அழுகலை தடுக்க வழிமுறைகள்.

அரியலூர் வட்டாரத்தில் பருத்திப் பயிர் மானாவாரியாக சுமார் 10,750 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த பயிர் தற்சமயம் இளம் பயிராகவும், சப்பை கட்டும் தருணத்திலும் உள்ளது.

அரியலூர் வட்டாரத்தில் பருத்திப் பயிர் மானாவாரியாக சுமார் 10,750 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த பயிர் தற்சமயம் இளம் பயிராகவும், சப்பை கட்டும் தருணத்திலும் உள்ளது.
கடந்த மாதத்தில் பரவலாக பெய்த மழைக்கு பின்னர், கடந்த ஒரு வாரமாக நிலவிய அதிக வெப்பநிலை காரணமாக மண்ணின் வெப்பநிலை அதிகமாகி வளம் குறைந்த மண்ணில் பருத்தியில் வேர் அழுகல் நோய் தென்படுகிறது.
இதன் பாதிப்பால் வயலில் திட்டுத்திட்டாக செடிகள் முழுவதும் திடீரென காய்ந்துவிடும் பாதிக்கப்பட்ட செடியை வேருடன் பிடுங்கி பார்த்தால், வேரின் மேற்பகுதியை தேய்த்தால் நார் போல் உரிந்து காணப்படும்.  இதனைக் கட்டுப்படுத்திட கார்பெண்டசிம் 50 சதவீத நனையும் தூளை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2 கிராம் வீதம் கலந்து பாதிக்கப்பட்ட செடிகள் மற்றும் அதனை சுற்றியுள்ள செடிகளின் வேர்பகுதியில் வேர்பகுதி நனையும் அளவிற்கு ஊற்ற வேண்டும். மழை பெய்வதற்கு முன்பாக சிங்க்சல்பேட் நுண்சத்தை ஒரு ஏக்கருக்கு 8 கிலோ வீதம் மணலுடன் கலந்து தூவ வேண்டும்.
இதனால் வேர் அழுகல் நோய் பரவாமலும் தாக்குதல் கட்டுப்படுத்தப்படுகிறது. விவசாயிகள் தாமதிக்காமல் வயலை கண்காணித்து மேற்காணும்படி பாதிப்பு இருந்தால் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அரியலூர் வட்டார வேளாண் உதவி இயக்குநர் பழனிசாமி வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com