பருத்தியில் வாடல் நோய் தாக்குதல்: திருமானூர் வட்டாரத்தில் ஆய்வு

அரியலூர் மாவட்டம், திருமானூர் வட்டாரத்தில் பருத்தி சாகுபடி பணிகளை வட்டார வேளாண் உதவி இயக்குநர் சே. கண்ணன் புதன்கிழமை ஆய்வு செய்தார்.

அரியலூர் மாவட்டம், திருமானூர் வட்டாரத்தில் பருத்தி சாகுபடி பணிகளை வட்டார வேளாண் உதவி இயக்குநர் சே. கண்ணன் புதன்கிழமை ஆய்வு செய்தார்.
இதுகுறித்து அவர் தெரிவித்தது: அரியலூர் மாவட்டம், திருமானூர் வட்டாரத்தில் பருத்தி பயிர் மானாவாரியாக சுமார் 1,500 ஹெக்டேரில் வீரிய ஒட்டு ரகங்களான ஆர்சி எச்2,  659 சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
தற்போது சன்னாவூர் மற்றும் பூண்டி பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பருத்தியில் வாடல் நோய் காணப்படுகிறது. இந்நோய் பாதிக்கப்பட்ட பருத்தி வயலில் ஆங்காங்கே இளஞ்செடியில், இலைகள் மஞ்சளாகவும்,  பழுப்பாகவும் மாறுவதுடன் இலைக்காம்புகளின் மீது பழுப்பு வளையம் காணப்படுகிறது.
மேலும் நாளடைவில் இளஞ்செடிகள் காய்ந்துவிடும். வளர்ந்த செடியில் நோய் தொற்றினால் அடிப்பாகத்திலுள்ள முதிர்ந்த இலைகள் ஆரம்பத்தில் மஞ்சளான மாறி பின் வாடி உதிர்ந்து விடும். தண்டின் அடிப்பகுதி கருமையாகவும் உரித்துப் பார்த்தால் கருப்பு அல்லது பழுப்பு நிற கோடுகள் காணப்படும்.
இதைக் கட்டுப்படுத்த 10 லிட்டர் தண்ணீரில் 2 கிராம் காப்பர் ஆக்ஸி குளோரைடு 1 பாக்கெட் ஸப்டோரோமைசின் (6 கிராம்) மற்றும் நான்கு கிராம் மல்டி கே ஆகியவற்றை கலந்து பாதிக்கப்பட்ட செடியின் மற்றும் அதனருகில் உள்ள செடியின் வேர் நன்கு நனையும் படி ஊற்றுவதன் மூலம் இந்நோயைக் கட்டுப்படுத்தலாம் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com