நியாய விலைக்கடை விற்பனையாளர் இருவர் தாற்காலிக பணியிடை நீக்கம்

அரியலூர் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட நியாய விலைக்கடை விற்பனையாளர்கள் இருவர் வியாழக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

அரியலூர் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட நியாய விலைக்கடை விற்பனையாளர்கள் இருவர் வியாழக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
இதுகுறித்து மண்டல இணைப் பதிவாளர் இரா.தயாளன் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: அரியலூர் மாவட்டத்தில் மொத்தம் 447 பொதுவிநியோகத் திட்ட நியாயவிலைக்கடைகள் செயல்பட்டு வருகின்றன. அதன் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசியப்பொருள்கள் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
குடும்ப அட்டைதாரர்களுக்கு உரிய பொருள்கள் முறையாக விநியோகிக்கப்படுகின்றனவா என்பதை கண்காணிக்க அமைக்கப்பட்ட பறக்கும்படையில் இணைப்பதிவாளர், துணைப்பதிவாளர்கள் தலைமையில் முதுநிலை ஆய்வாளர்கள் மற்றும் கூட்டுறவுச் சார்பதிவாளர்கள் அடங்கிய குழுவினர் நியாயவிலைக்கடைகளை வியாழக்கிழமை ஆய்வு செய்தனர். ஆய்வில் கட்டுப்பாடு பொருட்கள் இருப்பு குறைவு மற்றும் போலி ரசீது மூலமாக ரூ.14,104 மதிப்பிற்கு அத்தியாவசியப் பொருள்கள் விற்பனையில்,விற்பனையாளர்கள் முறைக்கேட்டில் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது.
இதில் அதிகளவு முறைக்கேட்டில் ஈடுபட்ட முத்துசேர்வாமடம் தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கத்தின் கட்டுப்பாட்டில் செயல்படும் முத்துசேர்வாமடம் விற்பனையாளர் பி.இந்துமதி தாற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதே போல் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்க வேண்டிய இரண்டு மூட்டை கோதுமையை வெளிச்சந்தையில் விற்பனை செய்வதற்காக ஒதுக்கி வைத்திருந்த மீன்சுருட்டி அங்காடி-1,விற்பனையாளர் மதினா பேகம் என்பவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com