மாணவிகள் சமூக வலைதளங்களில் செல்போன் எண்ணை பதிவிடக் கூடாது: மாவட்ட முதன்மை நீதிபதி பேச்சு

மாணவிகள் சமூக வலைதளங்களில் தங்களின் செல்லிடப்பேசி எண்ணை பதிவிடக்கூடாது என்றார் மாவட்ட முதன்மை நீதிபதி எம்.டி. சுமதி.

மாணவிகள் சமூக வலைதளங்களில் தங்களின் செல்லிடப்பேசி எண்ணை பதிவிடக்கூடாது என்றார் மாவட்ட முதன்மை நீதிபதி எம்.டி. சுமதி.
அரியலூர் மாவட்டம், விளாங்குடி அருகேயுள்ள அண்ணா பல்கலைக்கழகப் பொறியியல் கல்லூரியில், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு மற்றும் ஜயங்கொண்டம் சட்டப் பணிகள் குழு சார்பில், சனிக்கிழமை நடைபெற்ற சட்ட விழிப்புணர்வு முகாமில் நீதிபதி மேலும் பேசியது:
பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் சமூக வலைதளங்களில் செல்லிடப்பேசி எண்ணையும், புகைப்படங்களையும் பதிவிடுகின்றனர்.
இதனால், முகம் தெரியாத நபருடன் பழக்கம் ஏற்பட்டு பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாகின்றனர்.
மாணவிகள் சமூக வளைதலங்களில் தங்களுடைய செல்லிடப்பேசி எண்களை பதிவிடாமல் இருப்பது நல்லது. செல்லிடப்பேசியை பேசுவதற்கு மட்டுமே உபயோகித்தால் 'சைபர்' குற்றங்கள் குறையும்.
நீண்ட நாட்களாக தங்களது குடும்பத்தில் நடைபெறும் பாலியல், சிவில் மற்றும் குற்ற வழக்குகளில் வழக்குரைஞர்களை கொண்டு வாதாடமுடியாமல் இருக்கும் ஏழைகள், அரியலூர் மற்றும் ஜயங்கொண்டத்தில் உள்ள மாவட்ட, வட்ட சட்டப்பணிகள் குழுவை நாடி தங்களுடைய வழக்குகளை இலவசமாக வாதாடி முடித்து கொள்ளலாம் என்றார்.
நிகழ்ச்சியில், மாவட்ட உரிமையியல் நீதிபதி ஆர். பாரதிராஜா, ஜயங்கொண்டம், அரியலூர் சார்பு நீதிபதி பி. சரவணன் பங்கேற்று ராகிங் மற்றும் மாணவர்களுக்கான சட்டப் பாதுகாப்பு குறித்து பேசினர்.
கல்லூரி முதல்வர் பி. சுரேஷ்குமார், அரசு சிறப்பு வழக்குரைஞர் எஸ்.வி. சாந்தி, வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் ஏ.வி. செல்வராஜ் ஆகியோர் பங்கேற்று, குடும்ப நலச் சட்டம் குறித்து விளக்கினர்.
இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி செஞ்சிலுவை சங்க ஒருங்கிணைப்பாளர் ஆ. ஆதிலட்சுமி, நாட்டு நலப் பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் கே. நாகராஜன் ஆகியோர் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com