மின் விபத்துக்களை தடுக்க விழிப்புடன் இருக்க அறிவுறுத்தல்: புகார்களை தெரிவிக்க தொடர்பு எண்கள் அறிவிப்பு

மின்சாரத்தால் ஏற்படும் விபத்துக்களை தடுக்கும் வகையில் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்  என அரியலூர் மின் வாரியச் செயற்பொறியாளர் செல்வராஜ் அறிவுறுத்தியுள்ளார்.

மின்சாரத்தால் ஏற்படும் விபத்துக்களை தடுக்கும் வகையில் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்  என அரியலூர் மின் வாரியச் செயற்பொறியாளர் செல்வராஜ் அறிவுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மின் பாதையில் மின் கம்பிகள் அறுந்துகிடந்தால் பொதுமக்கள் தொடாமல், அருகில் செல்லமால் இருக்க வேண்டும். மின் கம்பங்கள் பழுதடைந்திருந்தாலோ, கம்பங்கள் சாய்ந்த நிலையிலோ, மின்கம்பிகள் தொய்வாக இருப்பதை கண்டறிந்தாலோ பொதுமக்கள் அவற்றை தொடாமல், உடனடியாக அருகேயுள்ள மின்வாரிய அலுவலகத்திற்கு தெரிவிக்க வேண்டும்.
மின் வாரியத்தைச் சாராத ஒருவர், மின் கம்பத்திலோ, மின் மாற்றியிலோ ஏறி, மின் தடையை சரிசெய்யக் கூடாது. மின்தடை ஏற்பட்டால், அருகேயுள்ள மின்வாரிய அலுவலகத்தில் தெரிவித்து வாரியப் பணியாளர் மூலம் மட்டுமே மின்தடையை சரிசெய்ய வேண்டும்.  
பொதுமக்கள் தங்களது சொந்த இடங்களில் பணிகள் மேற்கொள்ளும் போது, அருகே மின்பாதை கம்பிகள் சென்றால், அதனருகே செல்லாமலும், மின்பாதையை தொடாமலும் மிகவும் கவனமாக பணியை செய்ய வேண்டும். டிராக்டர் மற்றும் லாரியில் கரும்பு போன்றவற்றை உயரமாக ஏற்றிச் செல்லும்போது மிக கவனமாகச் செல்ல வேண்டும்.
மின்பாதைக்கு அருகே கட்டடம் கட்டும்போது, போதிய இடைவெளி விட்டு பணி மேற்கொள்ள வேண்டும். திருவிழா காலங்களில் தேரோட்ட நிகழ்ச்சிக்கு முன்பு மின்வாரிய அலுவலகத்திலிருந்து உரிய அனுமதி பெறவேண்டும். மழை காலத்தில் இடி அல்லது மின்னலின்போது வெட்டவெளியில் நிற்கக்கூடாது.
மின்கம்பிகள், கம்பங்கள், மரங்கள், உலோக கம்பிவேலி போன்றவை இல்லாத தாழ்வான பகுதிகளில் தஞ்சமடைய வேண்டும். கால்நடைகளை மின்கம்பத்திலோ அல்லது இழுவை கம்பியிலோ கட்டக் கூடாது. உயரமான வாகனங்கள், டிப்பர் லாரிகளை மின்கம்பிகளுக்கு கீழே இயக்குவதை தவிர்க்க வேண்டும். வயல்களில் மின்வேலிகளை அமைப்பது தண்டனைக்குரிய குற்றம்.
புகார் தெரிவிக்க, அரியலூர் செயற்பொறியாளர் -94458 53677,  அரியலூர் துணைமின் நிலையம் - 94458 53684, அரியலூர் நகரம் -94458 53685, அரியலூர் வடக்கு  94458 53687, அரியலூர் கிராமியம் -94458 53688,  தேளூர்- 94458 53689, செந்துறை உதவிச் செயற்பொறியாளர் - 94458 53678, செந்துறை கிராமியம் - 94458 53690, ஆர்.எஸ் மாத்தூர் - 94458 53692, ஜயங்கொண்டம் நகரம் உதவிச் செயற்பொறியாளர் -94458 53679, ஜயங்கொண்டம் துணை மின் நிலையம் -94458 53694, ஜயங்கொண்டம் தெற்கு -94458 53695, ஜயங்கொண்டம் வடக்கு - 94458 53699, உடையார்பாளையம் -94458 53697, ஜயங்கொண்டம்
கிராமியம் உதவிச் செயற்பொறியாளர் - 94458 53680, தா.பழுர் -94458 53696, சுத்தமல்லி -94458 53698, மீன்சுருட்டி -94458 53702, திருமானூர் உதவிச் செயற்பொறியாளர்- 94458 53681, சாத்தமங்கலம் துணைமின் நிலையம்- 94458 53705, திருமானூர் 94458 53706, திருமழபாடி - 94458 53707, கீழப்பழூவூர்- 94458 53708, ஏலாக்குறிச்சி - 94458 53709, ஆண்டிமடம்  உதவிச் செயற்பொறியாளார்- 94458 53683, ஆண்டிமடம் தெற்கு- 94458 53700, ஆண்டிமடம் வடக்கு - 94458 53701 பெரியாத்துக்குறிச்சி -94458 53703, பாப்பாக்குடி- 94458 53704.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com