டிசம்பர் 31-க்குள் அனைத்து வீடுகளிலும் தனிநபர் கழிப்பறை இருப்பதை உறுதி செய்ய வேண்டும்: ஊக்குநர்களுக்கு அரியலூர் ஆட்சியர் உத்தரவு

அரியலூர் மாவட்டத்தில் டிசம்பர் 31-க்குள் அனைவரின் வீடுகளிலும் தனிநபர் இல்ல கழிப்பறை இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என ஊக்குநர்களுக்கு  ஆட்சியர் க. லட்சுமிபிரியா உத்தரவிட்டார்.

அரியலூர் மாவட்டத்தில் டிசம்பர் 31-க்குள் அனைவரின் வீடுகளிலும் தனிநபர் இல்ல கழிப்பறை இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என ஊக்குநர்களுக்கு  ஆட்சியர் க. லட்சுமிபிரியா உத்தரவிட்டார்.
அரியலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து ஊராட்சிகளிலும் திறந்தவெளி கழிப்பிடமற்ற ஊராட்சிகளை உருவாக்கிட, மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை, தூய்மை பாரத இயக்கத்தின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊக்குநர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் கடந்த கடந்த 20ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் நடைபெற்றது. யுனிசெப் நிறுவனம் இவர்களுக்கு பயிற்சியளித்தது.
பயிற்சி முகாமின் நிறைவு நாளில் ஆட்சியர் க.லட்சுமிபிரியா தலைமையில்,  ஊக்குநர்கள் அனைவரும் முழு சுகாதார தமிழகம்-முன்னோடி தமிழகம் என்ற உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
பின்னர் ஆட்சியர் பேசியதாவது:  இப்பயிற்சியில் பங்கு பெற்ற ஊக்குநர்கள் அனைவரும் தங்களுடைய வீட்டில் கழிவறை கட்டி பயன்படுத்திட வேண்டும். கழிவறை பயன்படுத்துவதை குறித்து ஊக்குநர்கள் குறிப்பாக பெண்களிடம் கழிவறை பயன்பாட்டினை எடுத்துக்கூறி மனமாற்றத்தை ஏற்படுத்திட வேண்டும்.   
முதன்முதலில் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு கழிவறை பயன்படுத்தும் பழக்கத்தை  ஏற்படுத்த ஊக்குநர்கள் மற்றும் அலுவலர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். திறந்தவெளி மலம் கழிப்பதனால் வயிற்றுப்புழு, ரத்தசோகை போன்ற நோய்கள் ஏற்படுவதை குறித்து பொதுமக்களிடம் தெரிவிக்க வேண்டும்.
ஒவ்வொரு ஊராட்சிகளிலும் ஊக்குநர்கள் குழுக்களாக சென்று திறந்தவெளி மலம் கழிக்கும் 15 வீடுகளில் மனமாற்றத்தை ஏற்படுத்தி கழிவறை பயன்பாட்டினை கூறி கழிவறை பயன்பாட்டிற்கு அவர்களை கொண்டு வர வேண்டும். ஊக்குநர்கள் மற்றும் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்பதோடு மட்டுமல்லாமல் அரியலூர் மாவட்டத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் திறந்தவெளி மலம் கழிப்பதை டிசம்பர் -31-க்குள் தவிர்த்து தனிநபர் இல்லக்கழிப்பறை பயன்படுத்துவதை அனைவரும் உறுதிசெய்திட வேண்டும் என அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் லோகேஸ்வரி, உள்கட்டமைப்பு உதவி திட்ட அலுவலர் வர்கீஷ், செயற்பொறியாளர் (பொ) நிஜாமுதீன், யுனிசெப் பயிற்றுநர்கள் ராஜசேகர், பாஸ்கர், தர்மராஜ், மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் மற்றும் ஊக்குநர்கள், அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com