விபத்து இழப்பீடு வழங்காததால் அரசுப் பேருந்து ஜப்தி

அரியலூர் அருகே சாலை விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்காததால் அரசுப் பேருந்து வெள்ளிக்கிழமை ஜப்தி செய்யப்பட்டது.

அரியலூர் அருகே சாலை விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்காததால் அரசுப் பேருந்து வெள்ளிக்கிழமை ஜப்தி செய்யப்பட்டது.
அரியலூர் மாவட்டம்,  அஸ்தினாபுரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சந்திரகாசன்(30). இவர் கடந்த 9.2.2009 அன்று வி.கைகாட்டி அருகேயுள்ள பெரியநாகலூரிலிருந்து அஸ்தினாபுரத்துக்கு இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார்.
காட்டுபிரிங்கியம், அய்யாநகர் அருகே வந்த போது,அரியலூரிலிருந்து ஜயங்கொண்டம் நோக்கி வந்த  அரசுப் பேருந்து சந்திரகாசன் மீது மோதியதில், அவர் பலத்த காயமடைந்து அந்த இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து அரியலூர் சார்பு நீதிமன்றத்தில் சந்திரகாசன் மனைவி பிரியா தொடுத்த வழக்கில், விபத்தில் உயிரிழந்த சந்திரகாசனின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சத்து 12 ஆயிரத்து 345 இழப்பீட்டு தொகையை வழங்குமாறு அரசுப் போக்குவரத்துக் கழக கும்பகோணம் கோட்டத்துக்கு 2103 ஆம் ஆண்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனால் இழப்பீடு தொகை வழங்காததால் சந்திரகாசன் மனைவி பிரியா, அதே நீதிமன்றத்தில் கடந்த 15.7.2016 அன்று நிறைவேற்றுதல் மனு தாக்கல் செய்தார்.
 மனுவை விசாரித்த நீதிமன்றம், சந்திகாசன் குடும்பத்துக்கு, வழக்கு செலவு உள்பட ரூ.8 லட்சத்து,12 ஆயிரத்து,565-யை உடனடியாக வழக்குமாறு உத்தரவிட்டது. அப்போதும் இழப்பீடு வழங்காததால் விபத்துக்கு காரணமான அரசுப் பேருந்தை ஜப்தி செய்யுமாறு நீதிபதி சரவணன் உத்தரவிட்டார். இந்நிலையில் அரியலூர் பேருந்து நிலையத்தில் வெள்ளிக்கிழமை நின்று கொண்டிருந்த விபத்துக்கு காரணமான அந்த பேருந்தை நீதிமன்ற ஊழியர்கள்ஜப்தி செய்து நீதிமன்ற வளாகத்தில் நிறுத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com