கூடுதல் விலைக்கு உரம் விற்றால் கடும் நடவடிக்கை: ஆட்சியர்

அரியலூர் மாவட்டத்தில் கூடுதல் விலைக்கு உரம் விற்றால் கடும் நடவடிக்கை என மாவட்ட ஆட்சியர் க. லட்சுமிபிரியா எச்சரித்துள்ளார்.

அரியலூர் மாவட்டத்தில் கூடுதல் விலைக்கு உரம் விற்றால் கடும் நடவடிக்கை என மாவட்ட ஆட்சியர் க. லட்சுமிபிரியா எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: அரியலூர் மாவட்டத்தில் வேளாண் சாகுபடி பணிகள் முழு அளவில் நடைபெற்று வருகிறது. தற்போது பெய்துள்ள மழையை பயன்படுத்தி பருத்தி, மக்காச் சோளம், சோளம், உளுந்து மற்றும் கடலை போன்ற பயிர்கள் விதைப்புப் பணி 70 சதவீதம் முடிவடைந்துள்ளது.வேளாண் சாகுபடிக்கு தேவையான விதை, உரம் மற்றும் பூச்சிக்கொல்லி போன்ற இடுபொருட்கள் தனியார் மற்றும் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் இருப்பு வைத்து விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின்படி தனியார் மற்றும் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில், உரம், பூச்சிக் கொல்லி விற்பனை குறித்து திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.இந்த ஆய்வு 6 வட்டாரங்களில் செப். 13, 14 ஆம் தேதிகளில் நடைபெற்றது. அப்போது உரக்கட்டுப்பாட்டு ஆணையின் விதிமுறை மீறிய செயலுக்காக அரியலூரில் 4 தனியார் உர விற்பனையாளர்களுக்கு விற்பனை தடை விதிக்கப்பட்டு, விளக்கம் கோரப்பட்டுள்ளது.
இந்த விற்பனை தடை மூலம் 4 தனியார் உரக்கடையில் உள்ள 134 மெ.டன் உரங்கள் விற்பனை தடைவிதிக்கப்பட்டு முடக்கப்பட்டுள்ளன. இதேபோல் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் 27 மெ.டன் உரங்களுக்கும் விற்பனைக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.விற்பனை முனை இயந்திரம் பெற்றுள்ள தனியார் மற்றும் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள், உரங்களை விற்பனை செய்யும் போது இயந்திரத்தின் மூலம் மட்டுமே ரசீது இட்டு வழங்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உரக்கட்டுப்பாட்டு சட்டத்தின்படி உர விற்பனை செய்ய மொத்த மற்றும் சில்லறை விற்பனையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. உர விற்பனை விலையுடன் சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பின்படி பிரித்து ரசீது வழங்கிட அறிவுறுத்தப்பட்டுள்ளது.மேலும் அதிகபட்ச விற்பனை விலைக்குமேல் (எம்ஆர்பி) கூடுதலான விலைக்கு உரங்கள் விற்கப்படுவது தெரியவந்தால் சம்பந்தப்பட்ட உர விற்பனையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com