மின்மாற்றியை சீரமைக்கக் கோரிதிருமானூர் அருகே பொதுமக்கள் சாலை மறியல்

அரியலூர் மாவட்டம் திருமானுர் அருகேயுள்ள குருவாடி கிராமத்தில் 4 மாதங்களுக்கு முன்பு பழுதடைந்த மின்மாற்றியை சீரமைக்கக் கோரி அப்பகுதி மக்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அரியலூர் மாவட்டம் திருமானுர் அருகேயுள்ள குருவாடி கிராமத்தில் 4 மாதங்களுக்கு முன்பு பழுதடைந்த மின்மாற்றியை சீரமைக்கக் கோரி அப்பகுதி மக்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருமானூர் அருகேயுள்ள குருவாடி கிராமத்தில் உள்ள மின்மாற்றி (டிரான்ஸ்பார்மர்) கடந்த 4 மாதங்களுக்கு முன்பு பழுதாகியுள்ளது. இதனால், அருகிலுள்ள வேறொரு மின்மாற்றியில் இருந்து குருவாடி கிராமத்துக்கு மின்சாரம் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
ஆனால், மின்சாதனப் பொருள்கள் இயக்கும் அளவுக்கு போதுமான மின்சாரம் கிடைக்கவில்லை.இதனால் பழுதான மின்மாற்றியை சரி செய்யக் கோரி சம்பந்தப்பட்ட துறையினரிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. இதனால் ஆத்திரமடைந்த குருவாடி கிராம மக்கள் சனிக்கிழமை காலை தூத்தூரிலிருந்து தஞ்சாவூருக்கு சென்ற அரசுப் பேருந்தை சிறைபிடித்து மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த தூத்தூர் போலீஸார் மற்றும் ஏலாக்குறிச்சி மின்வாரிய உதவி செயற்பொறியாளர் சேகர் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று மின்மாற்றியை சீரமைத்துத் தருவதாக உறுதியளித்ததின் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com