திருமானூர் அருகே பெண் மாயம்
By DIN | Published on : 17th April 2018 09:28 AM | அ+அ அ- |
அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகேயுள்ள வைப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிசாமி மனைவி காந்திமதி (30). இவர்களுக்கு திருமணமாகி 11 ஆண்டுகள் ஆகின்றன. இவர்களுக்கு 5 வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில், கடந்த 13 ஆம் தேதி அரியலூர் சென்று விட்டு வருவதாகக் கூறிச்சென்ற காந்திமதி வீடு திரும்பவில்லை.
இதனையடுத்து, உறவினர்கள், நண்பர்கள் வீடு மற்றும் பல இடங்களில் தேடியும் காந்திமதி கிடைக்கவில்லை. இதுகுறித்து காந்திமதியின் தாய் பாப்பாத்தி அளித்த புகாரின் பேரில், கீழப்பழுவூர் போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.