வெள்ளாற்றில் மணல் திருட்டை தடுத்த 2 இளைஞர்களைக் கடத்தி தாக்குதல்

அரியலூர் - கடலூர் மாவட்டங்களுக்கு இடையே ஓடும்  வெள்ளாற்றில் திங்கள்கிழமை அதிகாலை நடைபெற்ற மணல் திருட்டைத் தடுத்த

அரியலூர் - கடலூர் மாவட்டங்களுக்கு இடையே ஓடும்  வெள்ளாற்றில் திங்கள்கிழமை அதிகாலை நடைபெற்ற மணல் திருட்டைத் தடுத்த இளைஞர்கள் இருவர் கடத்தி தாக்கப்பட்டனர். இதையறிந்த செம்பேரி கிராம மக்கள் மணல் அள்ளப் பயன்படுத்திய வாகனங்களை அடித்து நொறுக்கி தகராறில் ஈடுபட்டனர். 
அரியலூர், கடலூர் ஆகிய மாவட்டங்களின் எல்லையில் வெள்ளாறு ஓடுகிறது. இந்த ஆற்றின் சன்னாசி நல்லூர் முதல் கோட்டைக்காடு வரையுள்ள பகுதிகளில் இருந்து இருசக்கர வாகனம் மூலம் மணல் கடத்தப்படுவதாக, செம்பேரி கிராம மக்கள் போலீஸில் புகார் அளித்தும் மணல் கடத்தல் தொடர்ந்து வந்தது. 
இந்நிலையில், திங்கள்கிழமை அதிகாலை அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிலர், கடலூர் எல்லைப்பகுதி வெள்ளாற்றில் மணல் அள்ளிக்கொண்டிருந்ததை செம்பேரி கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் மணிகண்டன், பாலாஜி ஆகியோர் தடுத்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த மணல் கடத்தலில் ஈடுபட்டோர் மணிகண்டன், பாலாஜி ஆகிய இருவரையும் வேனில் கடத்தி, அவர்களைக் கடுமையாகத் தாக்கிவிட்டு, திட்டக்குடி அருகே இறக்கிவிட்டுள்ளனர்.
இதையறிந்த செம்பேரி கிராம மக்கள் ஒன்றுதிரண்டு மணல் அள்ளப் பயன்படுத்திய பொக்லைன் இயந்திரம், இருசக்கர வாகனத்தை அடித்து நொறுக்கினர். இதனால் மணல் கடத்தல் கும்பல், செம்பேரி கிராம மக்கள்  இடையே தகராறு ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற அரியலூர் டிஎஸ்பி மோகன்தாஸ் தலைமையிலான போலீஸார் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்ததையடுத்து, செம்பேரி மக்கள் கலைந்து சென்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com