சுகாதார விழிப்புணர்வுப் பேரணி

உலக மலேரியா தினத்தை முன்னிட்டு அரியலூரில்,பொது சுகாதார துறை மற்றும் அரசு தொழிற் பயிற்சி நிலையம் சார்பில் விழிப்புணர்வு பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

உலக மலேரியா தினத்தை முன்னிட்டு அரியலூரில்,பொது சுகாதார துறை மற்றும் அரசு தொழிற் பயிற்சி நிலையம் சார்பில் விழிப்புணர்வு பேரணி புதன்கிழமை நடைபெற்றது.
பேரணியை அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் ராதாகிருஷ்ணன் கொடியசைத்து தொடக்கி வைத்தார். பேரணியானது தொழிற் பயிற்சி நிலையத்தில் தொடங்கி,பிரதான சாலை வழியாகச் சென்று,மீண்டும் தொழிற் பயிற்சி நிலையத்தை அடைந்தது. 
இதில் கலந்து கொண்ட தொழிற்பயிற்சி நிலைய மாணவ,மாணவிகள் மலேரியா நோய் பரவும் விதம்,கொசு உற்பத்தி தடுப்பு நடவடிக்கை குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்திச் சென்றனர்.
வட்டார மருத்துவ அலுவலர் உமாமகேஸ்வரி, மாவட்ட மலேரியா அலுவலர்(பொ) தனம், சுகாதார ஆய்வாளர்கள் வகீல், ஆனந்த்,செல்வராஜ்,ஜெகதீஸ்வரன் மற்றும் பயிற்றுநர்கள் தனபால், பழனியப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com