அம்மன் கோயில்களில் பால்குடத் திருவிழா

ஆடி கடைசி வெள்ளியை முன்னிட்டு அரியலூர் மாவட்டத்திலுள்ள அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு, பால்குடத் திருவிழா நடைபெற்றது.

ஆடி கடைசி வெள்ளியை முன்னிட்டு அரியலூர் மாவட்டத்திலுள்ள அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு, பால்குடத் திருவிழா நடைபெற்றது.
அரியலூர் தெற்கு, வடக்குத் தெருவில் உள்ள திரவுபதியம்மன் கோயில்கள், கபிரியேல் தெரு மாரியம்மன், சிங்காரத் தெரு மாரியம்மன், மணலேரி மாரியம்மன் ஆகிய கோயிலில் பால்குடத் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திரளாந பக்தர்கள் பால் குடம், அலகு காவடி எடுத்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.
அதேபோல, திருமானூர், தா.பழூர், ஜயங்கொண்டம், செந்துறை, ஆண்டிமடம், உடையார்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மாரியம்மன், செல்லியம்மன், பெரியநாயகி அம்மன், காளியம்மன் கோயில்களுக்கு பக்தர்கள் பால்குடம் எடுத்து வழிபட்டனர். தொடர்ந்து, அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, சுவாமி வீதி உலா நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com