அரியலூரில் 201 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்

சுதந்திர தினத்தை முன்னிட்டு அரியலூர் மாவட்டத்தில் உள்ள 201 ஊராட்சிகளிலும் புதன்கிழமை (ஆக.15) கிராம சபை கூட்டம் நடைபெறுகிறது.

சுதந்திர தினத்தை முன்னிட்டு அரியலூர் மாவட்டத்தில் உள்ள 201 ஊராட்சிகளிலும் புதன்கிழமை (ஆக.15) கிராம சபை கூட்டம் நடைபெறுகிறது.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் மு.விஜயலட்சுமி வெளியிட்ட செய்திக் குறிப்பு:  சுதந்திர தினத்தை முன்னிட்டு 201 கிராம ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெறுகிறது. 
கூட்டத்தில், பிளாஸ்டிக் பொருள்கள் உற்பத்தி மற்றும் பயன்பாட்டைத் தடை செய்தல், கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டம் குறித்து விவாதித்தல், 2020-க்குள் அந்தியோதயா இயக்கம் முழு இலக்கினை எய்திட தீர்மானித்தல், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம், குடிநீரை சிக்கனமாகவும், முறையாகவும் பயன்படுத்துதல், திடக்கழிவு மேலாண்மை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட செயல்பாடுகள், மகளிர் முன்னேற்றத்திற்கு அரசின் திட்டங்கள், குழந்தை கடத்தல், குழந்தை திருமணம், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களைக் களைவது ஆகியவை குறித்து விவாதிக்கப்படுகிறது.
எனவே அந்தந்த பகுதிகளில் உள்ள மக்களவை, சட்டப்பேரவை உறுப்பினர்கள், சுயஉதவிக் குழுக்கள் மற்றும் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் இந்த கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்டு பயனடையுமாறு ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com