காவல்துறையினருக்கான பயிற்சி வகுப்பு தொடக்கம்

அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் காவல்துறையில் பணியாற்றுவோருக்கான பயிற்சி  வகுப்பு வெள்ளிக்கிழமை தொடங்கியது.

அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் காவல்துறையில் பணியாற்றுவோருக்கான பயிற்சி  வகுப்பு வெள்ளிக்கிழமை தொடங்கியது.
மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில், திருச்சி சரக டி.ஐ.ஜி. ஆர். லலிதா லட்சுமி பயிற்சியைத் தொடக்கி வைத்து பேசினார். அப்போது அவர் பேசியது:  பணியில் ஈடுபடும் காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் மன அழுத்தம் இல்லாமல், மனநிறைவோடு வாழ இப்பயிற்சி வழங்கப்படவுள்ளது. இதனை காவல்துறை அதிகாரிகளும்,காவலர்களும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார் அவர். 
பயிற்சிக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வி.ஆர். ஸ்ரீனிவாசன் தலைமை வகித்து பேசியது:
முதல் கட்டமாக அரியலூர் காவல் ஆய்வாளர்கள் 2 பேருக்கும்,உதவி ஆய்வாளர்கள் 3 பேருக்கும் காவலர்கள் 30 பேருக்கும் என 35 பேருக்கு இப்பயற்சி வழங்கப்படுகிறது. 
அரியலூர் மாவட்டத்திலுள்ள 836 காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள, 23 குழுக்களாக பிரிக்கப்பட்டு வாரம் தோறும் வெள்ளி,சனி,ஞாயிறு ஆகிய மூன்று நாள்களில் அனைவருக்கும் பயிற்சி அளிக்கப்படவுள்ளது என்றார் அவர்.
பெங்களூரு நிமான்ஸ் மருத்துவமனையில் பயிற்சி பெற்று வந்த காவல் ஆய்வாளர் சுமதி,உதவி ஆய்வாளர் லட்சுமிபிரியா, 
பேராசிரியர் ராஜசேகர் ஆகியோர் காவலர்களுக்குப் பயிற்சி அளித்தனர். 
பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டக் காவல்துறை சார்பில், காவலர்களுக்கு நிறைவாழ்வு பயிற்சி முகாம் தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 
 பெரம்பலூர் ஆயுதப்படை வளாகத்தில் நடைபெற்ற தொடக்க விழாவுக்கு டி.ஐ.ஜி. ஆர். லலிதா லட்சுமி தலைமை வகித்தார். மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் திஷா மித்தல் முன்னிலை வகித்தார். மத்திய மண்டல ஐ.ஜி. வரதராஜூ  முகாமைத் தொடக்கி வைத்துப் பேசினார்.
ஆய்வாளர் சுப்புலட்சுமி, உதவி ஆய்வாளர் சத்யா, மருத்துவர் புவனேசுவரி ஆகியோர், மன அழுத்தம் போக்கும் வழிமுறைகள் குறித்து பயிற்சி அளிக்கின்றனர். 
தொடர்ந்து 3 நாள்கள் அளிக்கப்படும் இப் பயிற்சியானது, பெரம்பலூர் மாவட்டத்தில் வாரம்தோறும் அளிக்கப்பட உள்ளதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com