மணல் அள்ள அனுமதி வழங்க வேண்டும்

தொகுப்பு வீடுகள் கட்டும் பணிக்காக, பயனாளிகளின் வீடுகளுக்கு கொண்டு செல்ல மணல் அள்ளுவதற்கு அனுமதியளிக்க வேண்டும் என்று மாட்டுவண்டித் தொழிலாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.அரியலூர் மாவட்டம், தா. பழூர் அருகிலுள்ள கோட்டியால் கிராமத்தில் நடைபெற்ற இந்த சங்கத்தின் கூட்டத்துக்கு மாட்டுவண்டித் தொழிலாளர்கள் சங்க மாவட்டத் தலைவர் சுரேஷ்குமார் தலைமை வகித்தார்.தொகுப்பு வீடுகளுக்கு மணல் அள்ளும் மாட்டு வண்டியை வருவாய்,காவல் துறையினர் பறிமுதல் செய்யக் கூடாது. மாவட்ட பயனாளிகளுக்கு மணல் அள்ள அனுமதி அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், விவசாய சங்க மாவட்டச் செயலர் இளங்கோவன்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செலர் ராதாகிருஷ்ணன் மாநிலக் குழு உறுப்பினர் திருமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர். 

தொகுப்பு வீடுகள் கட்டும் பணிக்காக, பயனாளிகளின் வீடுகளுக்கு கொண்டு செல்ல மணல் அள்ளுவதற்கு அனுமதியளிக்க வேண்டும் என்று மாட்டுவண்டித் தொழிலாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டம், தா. பழூர் அருகிலுள்ள கோட்டியால் கிராமத்தில் நடைபெற்ற இந்த சங்கத்தின் கூட்டத்துக்கு மாட்டுவண்டித் தொழிலாளர்கள் சங்க மாவட்டத் தலைவர் சுரேஷ்குமார் தலைமை வகித்தார்.தொகுப்பு வீடுகளுக்கு மணல் அள்ளும் மாட்டு வண்டியை வருவாய்,காவல் துறையினர் பறிமுதல் செய்யக் கூடாது. மாவட்ட பயனாளிகளுக்கு மணல் அள்ள அனுமதி அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், விவசாய சங்க மாவட்டச் செயலர் இளங்கோவன்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செலர் ராதாகிருஷ்ணன் மாநிலக் குழு உறுப்பினர் திருமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com