மக்கள் தொடர்பு முகாமில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

அரியலூர் மாவட்டம் அருங்கல் கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில், 93 பயனாளிகளுக்கு ரூ. 21 லட்சத்து 46 ஆயிரத்து மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் க.லட்சுமிபிரியா வழங்கினார்.

அரியலூர் மாவட்டம் அருங்கல் கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில், 93 பயனாளிகளுக்கு ரூ. 21 லட்சத்து 46 ஆயிரத்து மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் க.லட்சுமிபிரியா வழங்கினார்.
முகாமிற்கு, தலைமை வகித்து ரூ.57 ஆயிரத்து 210 மதிப்பில் 3 மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால் உபகரணங்கள்,  அரியலூர், சுப்புராயபுரம் ஆகிய ஊராட்சிகளைச் சேர்ந்த 5 மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.11 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பிலான வங்கிக் கடனுதவிக்கான காசோலைகள், 9 பயனாளிகளுக்கு ரூ. ரூ.4 லட்சத்து 79 ஆயிரத்து 884 மதிப்பிலான வேளாண் இடுப்பொருட்கள், 17 பயனாளிகளுக்கு ரூ.6.12 லட்சத்தில் இலவச வீட்டு மனை பட்டாக்கள், ஒரு பயனாளிக்கு நத்தம் வீட்டு மனைப்பட்டா, 2 பேருக்கு இறப்புச் சான்றுகள், 8 பேருக்கு பட்டா மாறுதல் ஆணைகள், 5 பேருக்கு வாரிசு சான்றுகள்,15 பேருக்கு ரூ.1.68 லட்சத்தில் முதியோர் உதவித்தொகை,14 பேருக்கு ரூ.1 லட்சத்து 88 ஆயிரத்து 500 மதிப்பில் சமூக பாதுகாப்பு நலத்திட்ட உதவித்தொகை,  ரூ.14 ஆயிரத்து 745 மதிப்பில் 2 பேருக்கு தையல் இயந்திரம்,ஒருவருக்கு சலவைப் பெட்டி, 12 பேருக்கு ரூ.1 லட்சத்து 12 ஆயிரத்து 757 மதிப்பில் வேளாண் இடுப்பொருள்கள் என மொத்தம் 93 பயனாளிகளுக்கு  ரூ.21 லட்சத்து 46 ஆயிரத்து 96 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.       
தொடர்ந்து நடைபெற்ற முகாமில், பொதுமக்களிடமிருந்து 107 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு அதில் 97 மனுக்கள் ஏற்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டன. முகாமில்  அரசின் நலத்திட்டகள் குறித்து அதிநவீன மின்னணு திரை மூலம் காண்பிக்கப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com