உடையார்பாளையம் பெரியநாயகி கோயிலில் ஊஞ்சல் உற்ஸவம்

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் ஸ்ரீபெரியநாயகி அம்மன் கோயில் திருவிழாவையொட்டி ஊஞ்சல் உற்ஸவம் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் ஸ்ரீபெரியநாயகி அம்மன் கோயில் திருவிழாவையொட்டி ஊஞ்சல் உற்ஸவம் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தில் திருச்சி - சிதம்பரம் சாலை அருகே செம்பவடவர் ஸ்ரீ பெரியநாயகி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஸ்ரீ பால விநாயகர், பாவாடைராயர், பைரவி, ஸ்ரீ பாலமுருகன் சன்னதிகளும் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் மகா
சிவராத்திரியையொட்டி 10 நாட்கள் திருவிழா நடைபெறும். கடந்த 13 ஆம் தேதி கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. தொடர்ந்து மயானக்
கொள்ளை, உச்சிகொப்பறை, வீரபத்திரர் படம், பகல் குறவஞ்சி, குடல்புடுங்கி மாலை என பல்வேறு விழாக்கள் நடைபெற்றது. தொடர்ந்து திங்கள்கிழமை மாலை பூச்சொரிதல் நடைபெற்று அம்மனுக்கு ஊஞ்சல் உற்ஸவம் நடைபெற்றது. முன்னதாக அம்மனுக்கு திரவியப் பொடி, மஞ்சள் பொடி, பால், தயிர், சந்தனம், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. விழாவில் உடையார்பாளையம் அதன் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.
செவ்வாய்க்கிழமை இரவு புஷ்ப பல்லக்கில் அம்மன் வீதி உலா, புதன்கிழமை மஞ்சள் விளையாட்டு ஆகியவற்றுடன் விழா நிறைவுபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோயில் தர்ம கர்த்த மகாலெட்சுமி உள்ளிட்ட விழாக் குழுவினர் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com