கங்கைகொண்டசோழபுரத்தில் மாசிமக பிரம்மோற்ஸவ விழா தொடக்கம்

அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகேயுள்ள கங்கைகொண்டசோழபுரம் பிரகதீஸ்வரர் கோயிலில் மாசிமக பிரம்மோற்ஸவ விழா கொடியேற்றத்துடன் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. 

அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகேயுள்ள கங்கைகொண்டசோழபுரம் பிரகதீஸ்வரர் கோயிலில் மாசிமக பிரம்மோற்ஸவ விழா கொடியேற்றத்துடன் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. 
வரலாற்றுச் சிறப்புமிக்க இக்கோயிலுக்கு புதிய கொடிமரம் கடந்தாண்டு ஜனவரி மாதம் அமைக்கப்பட்டு, பிப்.2-ல் குடமுழக்கு  நடைபெற்றது. கொடிமரம் கட்டப்பட்டு ஓராண்டுக்கு பிறகு ஆகமவிதிப்படி பிரம்மோற்ஸவ விழா நடத்த வேண்டும். 
அதன்படி இக்கோயிலில் கணபதி ஹோமம், விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி பூஜைகள் நடைபெற்று, ஸ்ரீகாஞ்சி காமகோடி அன்னாபிஷேக குழுவினர், பொதுமக்கள் சார்பில் பிரம்மோற்சவ விழா கொடியெற்றத்துடன் செவ்வாய்கிழமை தொடங்கியது. 
தொடர்ந்து யாகசாலை பூஜை நடைபெற்று மாலை சுவாமி திருவீதி உலா நடைபெற்றது. முன்னதாக உற்சவ மூர்த்திகளுக்கு  சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அப்போது சிவனடியார்கள் தேவார திருமுறைகளை பாடினர். பின்னர் மஹா தீப ஆராதனை காட்டப்பட்டு,  பிரசாதம் வழங்கப்பட்டது.  
10 நாள் நடைபெறும் விழாவில் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், வீதிஉலா நடைபெற உள்ளது. விழாவின் முக்கிய நிகழ்வாக  26-ம் தேதி சுவாமிக்கு திருக்கல்யாணம், 1-ம் தேதி மாசிமக தீர்த்தவாரியும் சிறப்பாக நடத்தப்பட உள்ளது. ஏற்பாடுகளை கங்கைகொண்டசோழபுரம் மேம்பாட்டு குழுமம் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்கின்றனர்.
100 ஆண்டுகளுக்கு பிறகு பிரம்மோற்ஸவம் கருவூர்தேவரால் திருவிசைப்பாவில் பத்துபாடல் பாடப்பெற்ற தலமாக இக்கோயில் விளங்குகிறது.
 பழங்காலத்தில் இருந்த கொடிமரம் சிதலமடைந்து இடைப்பட்ட நூற்றாண்டு காலத்தில் கொடிமரம் இல்லாமல் இருந்தது. இதனால் பிரம்மோற்ஸவ விழாவை நடத்தமுடியவில்லை. இந்நிலையில் புதிய கொடிமரம் அமைக்கப்பட்ட நிலையில் செவ்வாய்க்கிழமை இக்கோயிலில் பிரம்மோற்ஸவ விழாவானது நூற்றாண்டுகளை கடந்து நடைபெற்றது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com