மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பல்லூடகப் பயிற்சி

சென்னையில் தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகம் மூலம்,கை,கால் பாதிக்கப்பட்ட மற்றும் செவித்திறன் குறையுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச

சென்னையில் தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகம் மூலம்,கை,கால் பாதிக்கப்பட்ட மற்றும் செவித்திறன் குறையுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பல்லூடகப் பயிற்சி மற்றும் இலக்க புகைப்பட பயிற்சி நடைபெறுகிறது.
1.ஊஇய டிஜிட்டல் நான் (லீனியர்) எடிட்டிங் , 2.அயஐஈ  டிஜிட்டல் நான் (லீனியர்) எடிட்டிங், 3.அயஐஈ பல்லூடக பயிற்சி,4. இலக்க புகைப்பட பயிற்சி ,5. ஆடியோ இன்ஜினியரிங் 6. அனிமேஷன் உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. 
இப்பயிற்சியில் சேர 18 முதல் 40-க்குள் இருக்க வேண்டும். 8 ஆம் வகுப்பு தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். கை, கால் பாதிக்கப்பட்டோர்,செவித்திறன் (ம) மிதமான மனவளர்ச்சி குன்றியோராக இருக்க வேண்டும்.  மேற்கண்ட பயிற்சியில் சேர விருப்பமுள்ள அரியலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள், மாவட்ட மாற்றுதிறனாளிகள் நல அலுவலர், மாவட்ட மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலகம்,அரியலூர் மாவட்ட ஆட்சியரகம் என்ற முகவரியில் விண்ணப்பித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com