மூத்த குடிமக்கள், ஓய்வூதியர்கள் கூட்டமைப்பு கூட்டம்

உடையார்பாளையம் வட்ட அகில பாரத மூத்த குடிமக்கள் மற்றும் பென்சனர்கள் சங்கக் கூட்டம் ஜயங்கொண்டத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

உடையார்பாளையம் வட்ட அகில பாரத மூத்த குடிமக்கள் மற்றும் பென்சனர்கள் சங்கக் கூட்டம் ஜயங்கொண்டத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
சங்கத் தலைவர் சிவசிதம்பரம் தலைமை வகித்தார். ஜான் முன்னிலை வகித்தார். சுந்தரேசன் அறிக்கை வாசித்தார். கூட்டத்தில் தேசிய வங்கிகளில் பல லட்சம் கோடி கடன் பெற்று ஏமாற்றி வெளிநாடுகளுக்கு சென்ற கொள்ளையர்களை உடனடியாக கைது செய்து கடன் தொகையை வசூலிக்க  வேண்டும். தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் தமிழைக் கட்டாயப் பாடமாக வேண்டும். 2016 முதல் வழங்க வேண்டிய ஓய்வூதிய நிலுவையை உடனடியாக வழங்க வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தைத் தொடர வேண்டும். விடுபட்டுள்ள பொங்கல் கருணை தொகையை உடனடியாக வழங்க வேண்டும். அரசு அலுவலகங்களில் உள்ள காலியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 
கூட்டத்தில் ராமசாமி, சுப்ரமணியன், ராஜேந்திரன், பாஷ்யம், கோவிந்தராசன், கிருஷ்ணையா, துரைராசு, கலியபெருமாள், சண்முகசுந்தரம் ஆகியோர் பேசினர். முன்னதாக மறைந்த சங்க உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. ராமசாமி வரவேற்றார். ராசன் நன்றிகூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com