மதுவுக்கு எதிரான விழிப்புணர்வுப் பணி

அரியலூர் மாவட்ட ஆட்சியரக அலுவலகத்தில் மதுப் பழக்கத்துக்கெதிரான விழிப்புணர்வுப் பணிகள் மேற்கொள்வது குறித்த மாவட்ட அளவிலான குழு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

அரியலூர் மாவட்ட ஆட்சியரக அலுவலகத்தில் மதுப் பழக்கத்துக்கெதிரான விழிப்புணர்வுப் பணிகள் மேற்கொள்வது குறித்த மாவட்ட அளவிலான குழு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, ஆட்சியர் க.லட்சுமிபிரியா தலைமை வகித்தார்.  கூட்டத்தில், மாணவர்கள் மற்றும் பொதுமக்களைக் கொண்டு விழிப்புணர்வுப் பேரணி நடத்துதல், மதுப்பழக்கம் அதன் தீமைகள் குறித்த கட்டுரைப்போட்டி, மனிதச் சங்கிலி, மக்கள் கூடும் இடங்களில் மதுப் பழக்கத்தினால் ஏற்படக்கூடிய தீமைகள் குறித்து விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய விளம்பரப் பலகைகள் அமைத்தல், துண்டுப் பிரசுரங்கள் வெளியிடுதல் போன்ற பணிகள் மேற்கொள்வது குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது. கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிநவ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் சே.தனசேகரன், கோட்டாட்சியர்கள் மு.மோகனராஜன், ப. டினாகுமாரி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் எ. புகழேந்தி, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வு பிரிவு) சண்முகநாதன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com