அரசுப் பள்ளி மாணவருக்குப் பாராட்டு

சென்னையில் அண்மையில் நடைபெற்ற வாசகம் எழுதுதல் மற்றும் ஓவியப் போட்டியில் மாநில அளவில் முதலிடம் பெற்ற அரசுப் பள்ளி மாணவரை

சென்னையில் அண்மையில் நடைபெற்ற வாசகம் எழுதுதல் மற்றும் ஓவியப் போட்டியில் மாநில அளவில் முதலிடம் பெற்ற அரசுப் பள்ளி மாணவரை அரியலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஏ. புகழேந்தி வெள்ளிக்கிழமை பாராட்டி வாழ்த்தினார்.
தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் மாநில அளவில் ஓசோன் படலத்தை பாதுகாத்தல் என்னும் தலைப்பில்,வாசகம் எழுதுதல் மற்றும் ஓவியப் போட்டிகள் சென்னையில் அண்மையில் நடைபெற்றன. 
இதில் வாசகம் எழுதுதல் போட்டியில் வென்று முதலிடம் பெற்ற அரியலூர் மாவட்ட தேவமங்கலம் அருகேயுள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவர் சிவசக்திக்கு ரூ.10 ஆயிரத்துக்கான காசோலை, கேடயத்தை  சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கே.சி. கருப்பண்ணன் வழங்கினார்.
மேலும் ஆறுதல் பரிசாக நாகமங்கலம், பாரிவள்ளல் மேல்நிலைப்பள்ளி மாணவி அகல்யாசக்தி மற்றும் அஸ்தினாபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவி சந்தியா ஆகியோருக்கு தலா ரூ.2 ஆயிரத்துக்கான காசோலை, கேடயத்தை வழங்கினார். இதையடுத்து அந்த மாணவ,மாணவிகள், அரியலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஏ. புகழேந்தியை வெள்ளிக்கிழமை சந்தித்து பாராட்டு பெற்றனர். மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் அனந்தநாராயணன்,  அரியலூர் கல்வி மாவட்ட தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் குணபாலினி, சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் கொளஞ்சிநாதன்,  ஆசிரியர்கள் செங்குட்டுவன், மாவட்டக் கல்வி அலுவலரின் உதவியாளர் பொய்யாமொழி ஆகியோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com