ஜல்லிக்கட்டுக்கு 15 நாள்களுக்கு  முன்பே விண்ணப்பிக்க வேண்டும்

அரியலூர் மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்குதல் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.

அரியலூர் மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்குதல் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.
ஆட்சியர் க. லட்சுமிபிரியா தலைமை வகித்து கூறியது:
ஜல்லிக்கட்டு நடைபெறும் கிராமம், ஜல்லிக்கட்டு நடத்தும் பொறுப்பாளர்களின் விவரம், முழு முகவரியுடன், ஜல்லிக்கட்டில் பங்குபெறும் காளைகளின் எண்ணிக்கை, ஜல்லிக்கட்டு போட்டியில் பங்குபெறும் மாடுபிடி வீரர்களின் எண்ணிக்கை, ஜல்லிக்கட்டு விழாவில் பங்குபெறும் தன்னார்வலர்களின் எண்ணிக்கை மற்றும் முகவரி, ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்தின் முழு விளக்க வரைபடம் ஆகியவை இணைக்கப்பட வேண்டும்.
போட்டி திறந்தவெளி மைதானத்தில் நடைபெற வேண்டும், போட்டிக்கு முன் காளைகள் காத்திருக்கும் இடத்தில் ஒரு காளைக்கு 60 சதுர அடி என்ற வீதத்தில் போதிய இடவசதி இருத்தல் வேண்டும். 
பார்வையாளர்கள் அமரும் இடம் உரிய அரசு விதிகளின்படி அமைக்கப்பட்டிருக்க வேண்டும். போட்டிக்கு முன் காளைகள் காத்திருக்கும் இடத்தில் போதுமான நிழல், தண்ணீர் மற்றும் தீவன வசதி செய்யப்பட்டிருக்க வேண்டும், காளைகளை மருத்துவப் பரிசோதனை செய்ய போதுமான இடவசதி, தடுப்பு வேலி அமைக்க வேண்டும்.
காளைகள் ஓடும் இடம் 15 சதுர மீட்டர் தேங்காய் நார் மற்றும் இரண்டடுக்கு வேலி அமைக்கப்பட்டு பாதுகாப்பு செய்யப்பட்டிருக்க வேண்டும், காளைகள் சேகரிக்கும் இடம் 60 சதுர அடியில் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். ஜல்லிக்கட்டு நடத்த விரும்பும் கிராம மக்கள் ஜல்லிக்கட்டு நடத்த உத்தேசித்துள்ள 15 நாள்களுக்கு முன்னதாக ஜல்லிக்கட்டு விதிகளுக்கு உட்பட்டு விண்ணப்ப படிவத்தில் எவ்வித விடுபாடுகளுமின்றி பூர்த்தி செய்து மாவட்ட ஆட்சியரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.விண்ணப்பங்களை கால்நடைப் பராமரிப்புத் துறை, மண்டல இணை இயக்குநர், ஆட்சியரகம், அரியலூர் என்ற முகவரியில் பெற்றுக் கொள்ளலாம்,மேலும் w‌w‌w.​a‌r‌i‌y​a‌l‌u‌r.‌t‌n.‌n‌i​c.‌i‌n இணையதளத்திலும் பதிவிறக்கலாம் என்றார் அவர்.
கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிநவ்குமார்,வ மாவட்ட வருவாய் அலுவலர் சே. தனசேகரன்,கால்நடைப் பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநர் நஷீர், கோட்டாட்சியர்கள் மோகனராஜன், டினாகுமாரி, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ்குமார், அரியலூர் வட்டாட்சியர் முத்துலட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com