ஏலாக்குறிச்சி ஆலய வளாகத்தில் பொங்கல் பண்டிகை

அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகேயுள்ள ஏலாக்குறிச்சி அடைக்கல அன்னை ஆலயத்தில் பொங்கல் விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. 

அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகேயுள்ள ஏலாக்குறிச்சி அடைக்கல அன்னை ஆலயத்தில் பொங்கல் விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. 
தமிழ் அன்னையாய் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஆலயத்தின் அன்னைக்கு ஆண்டுதோறும் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். நிகழாண்டில் ஆலயத்தின் முன்புள்ள வளாகத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவுக்கு பங்கு தந்தை 
சுவைக்கின் தலைமை வகித்தார்.
அரியலூர் வட்டாட்சியர் முத்துலட்சுமி முன்னிலை வகித்தார். அரியலூர் கோட்டாட்சியர் மோகனராஜன் பொங்கல் பானையில் பச்சரிசி, பால் ஊற்றி தொடங்கி வைத்தார்.  
விழாவில் தொடர்ந்து இருங்கலூர் பங்கு தந்தை அகஸ்டின் தலைமையில் பொங்கல் விழா சிறப்புத் திருப்பலி நடைபெற்றது. பல கிராமங்களில் இருந்து வந்திருந்த பக்தர்கள், அன்னையின் முன்பு பொங்கல் வைத்து கொண்டாடிச் சென்றனர். உதவி பங்கு தந்தை திமோத்தி வரவேற்றார்.
இந்து முறைப்படி வணங்கி விட்டு பொங்கல் விழாவைக் கொண்டாடினார்கள். பொங்கல் பண்டிகையை கிறிஸ்தவ மக்கள் கொண்டாடியதைக் கண்டு நகரில் உள்ளவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com