ஹாக்கி போட்டியில் வென்ற அணிக்குப் பரிசு

அரியலூர் அருகேயுள்ள மான்போர்ட் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான ஹாக்கிப் போட்டியில் வென்ற அணிக்கு திங்கள்கிழமை பரிசளிக்கப்பட்டது.

அரியலூர் அருகேயுள்ள மான்போர்ட் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான ஹாக்கிப் போட்டியில் வென்ற அணிக்கு திங்கள்கிழமை பரிசளிக்கப்பட்டது.
பொங்கலை முன்னிட்டு நடைபெற்ற போட்டியை  அரியலூர் பசுபதி ஹாக்கி கழகச் செயலர் முருகானந்தம் தொடக்கி வைத்தார். இந்தப் போட்டியில் 6 அணிகள் பங்கேற்றன. லீக் சுற்றின் அடிப்படையில் நடந்த போட்டியில், பசுபதி ஹாக்கி அணி 7-5 என்ற புள்ளிக்கணக்கில் மான்போர்ட் முன்னாள் மாணவர் அணியை வீழ்த்தி முதலிடம் வென்றது.
3-ம் இடத்துக்கான போட்டியில் மான்போர்ட் பள்ளி அணி 4-1 என்ற புள்ளிக் கணக்கில் வித்யா மந்திர் பள்ளியை வீழ்த்தியது. இதைத் தொடர்ந்து வென்ற அணிகள், பங்கேற்ற வீரர்களுக்கு 
பரிசு, கோப்பை திங்கள்கிழமை மாலை வழங்கப்பட்டது.  போட்டி ஏற்பாடுகளை சங்க நிர்வாகிகள் ராஜா, சம்பத்,ராஜேந்திரன் ஆகியோர் செய்தனர். போட்டி நடுவர்களாக ஜபருல்லா, குணேசகரன் செயல்பட்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com