திருமானூர் கோயில்களில் அமாவாசை சிறப்பு வழிபாடு

திருமானூர் பகுதியிலுள்ள கோயில்களில் அமாவாசையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.

திருமானூர் பகுதியிலுள்ள கோயில்களில் அமாவாசையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.
திருமானூர் அருகே பெரியமறை கிராமத்தில் உள்ள ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீநிவாச பெருமாள் கோயிலில் அமாவாசையை முன்னிட்டு சிறப்பு யாகம் நடைபெற்றது. தொடர்ந்து சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. சுவாமி தரிசனம் செய்த பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
பெரியமறையில் உள்ள ஸ்ரீ உஜ்ஜினி மாகாளியம்மன் கோயிலில் அமாவாசையை முன்னிட்டு மிளகாய் கொண்டு யாகம் நடைபெற்றது. தொடர்ந்து, சுவாமிகளுக்கு மஞ்சள், சந்தனம், இளநீர், தயிர் உள்ளிட்ட அபிஷேக பொருள்களால் அபிஷேகம் நடத்தப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. அரண்மனைக்குறிச்சி தில்லை காளியம்மன் கோயில், கீழப்பழுவூர், கீழகுளத்தூர், விழுப்பனங்குறிச்சி, ஏலாக்குறிச்சி, நரசிங்கபுரம் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள மாரியம்மன் கோயில்களில் அமாவாசை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com