மானியத்தில் முந்திரி ஒட்டுச் செடிகள் பெற விவசாயிகளுக்கு அழைப்பு

மானாவாரி மேம்பாட்டுத் திட்டத்தில் முந்திரி ஒட்டுச் செடிகளை மானிய விலையில் விவசாயிகள் பெற்றுக் கொள்ளலாம்.

மானாவாரி மேம்பாட்டுத் திட்டத்தில் முந்திரி ஒட்டுச் செடிகளை மானிய விலையில் விவசாயிகள் பெற்றுக் கொள்ளலாம்.
இதுகுறித்து அரியலூர் மாவட்ட ஆட்சியர் மு.விஜயலட்சமி வெளியிட்ட செய்திக் குறிப்பு: தேசிய நீடித்த நிலையான வேளாண் இயக்கத்தின் கீழ் செயல்படுத்தப்படும் ஒருங்கிணைந்த பண்ணைய முறைகள் மூலம் மானாவாரி பகுதிகளில் சாகுபடி பரப்பு அதிகரிக்கவும், விவசாயிகளின் வருமானத்தை பெருக்கும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதால் இத்திட்டம் விவசாயிகளுக்கு வரப்பிரசாதமாகும்.
நிகழாண்டில் இத்திட்டம் ரூ.1.92 கோடியில் செயல்படுத்தப்பட உள்ளது. தோட்டக்கலை சார்ந்த பண்ணையத்தின் கீழ் விவசாயிகள் முந்திரி பயிருடன் ஊடு பயிர் சாகுபடி செய்ய எக்டருக்கு ரூ.25,000 வரை மானியமாக வழங்கப்படுகிறது. குறைந்த காலத்தில் நிறைந்த வருவாயை ஈட்டித்தரும் நிழல் வலைக் கூடாரம் அமைக்கவும் மானியம் வழங்கப்படுகிறது. விவசாய உற்பத்தித் திறனை உயர்த்தும் நவீன தொழில் நுட்பங்களின் பலன்கள், செயல்பாடுகள் பற்றிய பயிற்சிகளும் அளிக்கப்படுகிறது. இதுதொடர்பான தகவல் அறிந்து பயன் பெற தோட்டக்கலை துணை இயக்குநர் அலுவலகம், உழவன் செயலி மூலமாக 04329- 224105 என்ற தொலைபேசியை தொடர்பு கொண்டும் பயன் பெறலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com