ஏரிகளை தூர்வார இந்திய கம்யூ. கோரிக்கை

அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே புள்ளம்பாடி பாசன வாய்க்கால் ஏரிகளான பளிங்காநத்தம், வெங்கனூர், கரைவெட்டி மற்றும்

அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே புள்ளம்பாடி பாசன வாய்க்கால் ஏரிகளான பளிங்காநத்தம், வெங்கனூர், கரைவெட்டி மற்றும் காமரசவல்லி சுக்கிரன் ஏரி உள்ளிட்ட பெரிய ஏரிகளை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
திருமானூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அக்கட்சியின் ஒன்றியக் குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட இதர தீர்மானங்கள்: திருமானூர் ஒன்றியத்தில் பல ஊராட்சிகளிலும் 100 நாள் வேலை நடைபெறவில்லை. மேலும், வேலை செய்தவர்களுக்கு பணமும் வழங்கப்பட வில்லை. சுள்ளங்குடி - எழுநாட்சிபுரம் சாலை, விழுப்பனங்குறிச்சி - இருளர்நத்தம் சாலைகளில் தெருவிளக்குகள் எரிவதில்லை. உடனடியாக சீரமைக்க வேண்டும்.சேனாபதி பிற்படுத்தப்பட்டோர் மயானத்துக்கு சாலை வசதி ஏற்படுத்தி தரவேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்துக்கு, கட்சி நிர்வாகி மருதமுத்து தலைமை வகித்தார். ஒன்றிய துணை செயலாளர்கள் பன்னீர்செல்வம், கலியபெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றியச் செயலாளர் ஆறுமுகம் கலந்து கொண்டு கட்சியின் செயல்பாடுகள், வளர்ச்சி குறித்து பேசினார். கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் பரிசுத்தம், பரிமளா, சிதம்பரம் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com