குறைதீர் கூட்டத்தில் 293 மனுக்கள் பொதுமக்கள் அளிப்பு

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்புக் கூட்டத்தில், பொதுமக்களிடம் இருந்து 293 கோரிக்கை மனுக்களை ஆட்சியர் மு.விஜயலட்சுமி பெற்றுக்கொண்டார்.

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்புக் கூட்டத்தில், பொதுமக்களிடம் இருந்து 293 கோரிக்கை மனுக்களை ஆட்சியர் மு.விஜயலட்சுமி பெற்றுக்கொண்டார்.
கூட்டத்துக்கு அவர், தலைமை வகித்து, பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து பெற்ற கோரிக்கை மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். பின்னர், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 1 நபருக்கு ரூ.58,840-மதிப்பில் இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்டபெட்ரோல் ஸ்கூட்டரையும், 3 நபருக்கு ரூ.9,888 மதிப்பில் பார்வையற்றோருக்கான நவீன ஒளிரும் மடக்கு குச்சிகளையும் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.  கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர்  சே.தனசேகரன், துணைஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அ. பூங்கோதை, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஆர்.பாலாஜி மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். 
பெரம்பலூர்... பெரம்பலூரில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பொது மக்களிடமிருந்து 253 மனுக்கள் பெறப்பட்டன. 
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில், பொது மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு தலைமை வகித்த ஆட்சியர் வே. சாந்தா, பொதுமக்களிடம் இருந்து, மனுக்களைப் பெற்ற அவர்,  சம்மந்தப்பட்ட அலுவலர்களிடம் மனுக்கள் குறித்த கூடுதல் விவரங்களைக் கேட்டறிந்து, குறித்த காலத்துக்குள் மனுக்கள் மீது நடவடிக்கை எடுத்து, மனுதாரருக்கு உரிய பதில் அளிக்குமாறு அறிவுறுத்தினார். மேலும், பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது தனி கவனம் செலுத்தி, பணியாற்ற வேண்டுமென அரசுத்துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். 
கூட்டத்தில், முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொது மக்களிடமிருந்து 253 மனுக்கள் பெறப்பட்டன. மாவட்ட வருவாய் அலுவலர் ஆ. அழகிரிசாமி, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் மனோகரன், மகளிர் திட்ட இயக்குநர் தேவநாதன் உள்பட அரசு அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com