அரியலூர் மாவட்டத்தில் பரவலான மழை

அரியலூர் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை பெய்த மழையால்  விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். இருப்பினும், பருத்தி, மக்காச்சோளம் அறுவடை செய்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. 

அரியலூர் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை பெய்த மழையால்  விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். இருப்பினும், பருத்தி, மக்காச்சோளம் அறுவடை செய்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. 
தமிழகத்தில் பெரும்பாலன மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை பரவலான  மழை பெய்தது. அரியலூர் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் லேசான காற்றுடன் பரவலாக மழை பெய்தது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை சற்று பாதிக்கப்பட்டது. அரியலூர் மாவட்ட டெல்டா பகுதிகளான திருமானூர், தா. பழூர் உள்ளிட்ட பகுதிகளில் பயிரிடப்பட்ட சம்பா பயிர்கள் தண்ணீரின்றி காய்ந்து வரும் நிலையில், இந்த மழை பயன் உள்ளதாக அமைந்தது. ஆனால் மேட்டாங்காடுகளில் சாகுபடி செய்துள்ள பருத்தி மற்றும் மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. அறுவடை செய்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக மாவட்டம் முழுவதும் இந்த மழையால் குளிர்ச்சி நிலவியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com