ஜயங்கொண்டத்தில்  ஓய்வூதியர்  சங்கக் கூட்டம்

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் வட்ட அகில பாரத மூத்த குடிமக்கள் மற்றும் ஓய்வூதியர்கள் சங்கக் கூட்டம் ஜயங்கொண்டத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் வட்ட அகில பாரத மூத்த குடிமக்கள் மற்றும் ஓய்வூதியர்கள் சங்கக் கூட்டம் ஜயங்கொண்டத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
உடையார்பாளையம் வட்ட அகிலபாரத மூத்த குடிமக்கள் மற்றும் ஓய்வூதியர் சங்கத் தலைவர் சிவசிதம்பரம் தலைமை வகித்தார். மணியப்பன் முன்னிலை  வகித்தார். செயலர் ராமமூர்த்தி அறிக்கை வாசித்தார். கூட்டத்தில் மறைந்த உறுப்பினர்களுக்கு அஞ்சலி  செலுத்தப்பட்டது. தொடக்கப்பள்ளி முதல் கல்லூரி வரையுள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். அனைத்துக் கல்வி நிலையங்களிலும் தமிழைக் கட்டாயமாக போதிக்க  வேண்டும். கடந்த 2016 அக்டோபர் மாதம் முதல் கொடுக்கப்பட வேண்டிய ஓய்வூதிய  நிலுவையை  உடனடியாக வழங்கவேண்டும். மத்திய அரசு வழங்கியுள்ளது போல 20 ஆண்டுப் பணிக்கு முழு ஓய்வூதியம் வழங்க  வேண்டும். பழைய  ஓய்வூதிய திட்டத்தைத் தொடர வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  பொருளாளர் சுந்தரேசன், ராமசாமி, பன்னீர்செல்வம்,  கோவிந்தராசன், ராசேந்திரன், லூர்துசாமி, வெங்கடாசலம், சேகர், ராமலிங்கம், சண்முகசுந்தரம் உள்ளிட்ட  பலர் கலந்துகொண்டனர். துணைத் தலைவர் சோ. ராமசாமி வரவேற்றார். மாவட்ட பிரதிநிதி  கலியபெருமாள் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com