கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கத்தினர் 2 ஆவது நாளாக ஆர்ப்பாட்டம்

அரியலூர் மற்றும் ஜயங்கொண்டத்தில் அனைத்திய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கம், தேசிய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கம் சார்பில் 2 ஆவது நாளாக புதன்கிழமையும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அரியலூர் மற்றும் ஜயங்கொண்டத்தில் அனைத்திய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கம், தேசிய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கம் சார்பில் 2 ஆவது நாளாக புதன்கிழமையும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கிராமிய அஞ்சலக ஊழியர்களுக்கு கமலேஷ் சந்திரா கமிட்டியின் (7-வது ஊதியக் குழுவின்) பரிந்துரையை உடனடியாக அமல்படுத்த வேண்டும். பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜயங்கொண்டம் தலைமை அஞ்சல் நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு கிராமிய அஞ்சலக ஊழியர் சங்க உப கோட்ட செயலர் கல்யாணம் தலைமை வகித்தார். கலியபெருமாள் முன்னிலை வகித்தார். தேசிய கூட்டமைப்பு தொழிலாளர் சங்க நிர்வாகி பரமசிவம் ஆர்ப்பாட்டத்தைத் தொடங்கி வைத்தார். இதேபோல் அரியலூர் தலைமை அஞ்சல் நிலையம் முன்பும் கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கலைந்து சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com