பயிர்க் காப்பீடு செய்ய அழைப்பு

பிரதம மந்திரியின் பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் பயன் பெற விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார் ஆட்சியர் மு.விஜயலட்சுமி.

பிரதம மந்திரியின் பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் பயன் பெற விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார் ஆட்சியர் மு.விஜயலட்சுமி.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: அரியலூர் மாவட்டத்தில் 2018 - 19 ராபி பருவத்தில் நெல் - 2 சம்பா பயிர் சாகுபடி செய்யவுள்ள அனைத்து விவசாயிகளும், பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்ந்து
பயனடையலாம். இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் விவசாயிகள் உரிய ஆவணங்களுடன் அருகில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் சேவை மையம் மற்றும் பொது சேவை மைய முகவர்களை அணுகி பதிவுசெய்து கொள்ளலாம். சம்பா பயிருக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ. 443.25 பிரிமியத்தை நவம்பர் 30 ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும்.  மேலும் விவரங்களுக்கு வட்டார வேளாண் அலுவலர்களை அணுகுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com