வேனாநல்லூரில் ஜல்லிக்கட்டு: காளைகள் முட்டியதில் 15 பேர் காயம்

அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே வேனாநல்லூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டித் தள்ளியதில் 15 பேர் காயமடைந்தனர்.

அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே வேனாநல்லூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டித் தள்ளியதில் 15 பேர் காயமடைந்தனர்.
முன்னதாக, கிராம முக்கியஸ்தர்களால் சீர்வரிசை எடுத்து வரப்பட்டது. தொடர்ந்து, மாரியம்மன் கோயில் முன்பு அமைக்கப்பட்டிருந்த வாடிவாசல் வழியாக கோயில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. இதன்பின், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, கரூர், சேலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து அழைத்து வரப்பட்ட 350 காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன. 
சீறிப்பாய்ந்து வந்த காளைகளை அடக்க முயன்றதில் பிராஞ்சேரி கண்ணன்(25), சோழங்குறிச்சி ராதாகிருஷ்ணன்(34), திருமானூர் பாலாஜி(28), கூழாட்டுகுப்பம் கலியமூர்த்தி(43) உள்ளிட்ட 15 பேர் காயமடைந்தனர். பலத்த காயமடைந்த சொக்கலிங்கபுரம் அசோக்குமார்(30), திருச்சியைச் சேர்ந்த முருகானந்தம்(31), சதிஷ்குமார்(23), கருப்பன் ஆகியோர் ஜயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 
எஞ்சியவர்களுக்கு அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. ஜல்லிக்கட்டில், காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கு வெள்ளி நாணயங்கள், சில்வர் பாத்திரங்கள், கட்டில், சேர், வேட்டி, சேலை, சைக்கிள் உள்ளிட்ட பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டது. சுற்றுப்புற கிராமங்களில் இருந்து திரளான மக்கள் ஜல்லிக்கட்டு போட்டியை கண்டு ரசித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com