வருவாய் மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி

அரியலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் வருவாய் மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

அரியலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் வருவாய் மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் மு. விஜயலட்சுமி தொடக்கி வைத்து தெரிவித்தது:
பள்ளி மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையிலும், அதனை வளர்க்கும் முயற்சியிலும் பள்ளி அளவிலும்,கல்வி மாவட்ட அளவிலும்  ஆண்டுதோறும் அறிவியல் கண்காட்சி நடத்தப்படுகிறது.
கண்காட்சியுடன், அறிவியல் பெருவிழா, கணித கருத்தரங்கம் மற்றும் ஆசிரியர் கண்காட்சி ஆகியவையும் நடத்தப்பட்டது. வீட்டுக்கு ஒரு விஞ்ஞானியை உருவாக்கிடும் விதத்தில் இக்கண்காட்சியின் படைப்புகள் இடம்பெற்றிருந்தன.
110 பள்ளிகளிலிருந்து 110 படைப்புகள் இடம்பெற்றிருந்தன. சிறந்த 3 படைப்புகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள் மதுரையில் நடைபெறும் மாநில கண்காட்சியில் இடம்பெறும் என்றார் அவர்.
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அ.புகழேந்தி,அரியலூர் கல்வி மாவட்ட அலுவலாகள் செ. செல்வம் ,உடையார்பாளையம் கல்வி மாவட்ட அலுவலர் ந. மணிவண்ணன்,செந்துறை கல்வி மாவட்ட அலுவலர் க. வெற்றிச்செல்வி , பள்ளித் துணை ஆய்வாளர் ஆர். பழனிசாமி, தலைமையாசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com