"3000 தொடக்கப்பள்ளிகளை மூடும் முடிவை அரசு கைவிட வேண்டும்'

தமிழகத்தில் 3 ஆயிரம் தொடக்கப் பள்ளிகளை மூடும் முடிவை அரசு கைவிட வேண்டும் என்றார் தமிழ்நாடு தொடக்கப் பள்ளி

தமிழகத்தில் 3 ஆயிரம் தொடக்கப் பள்ளிகளை மூடும் முடிவை அரசு கைவிட வேண்டும் என்றார் தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுச் செயலர் ரெங்கராஜன்.
அரியலூரில் வெள்ளிக்கிழமை நடந்தஆசிரியர் கூட்டணியின் கூட்டத்தில் பங்கேற்று அவர் பேசுகையில், 15 மாணவர்களுக்கு கீழ் உள்ள 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொடக்கப் பள்ளிகளை மூடுகிற நிலையில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது. குறிப்பாக அந்த பள்ளிகளுக்கு கற்றல், கற்பித்தல் மானியம் வழங்கப்படாமல் உள்ளது. மற்ற பள்ளிகளுக்கு வழங்க அரசானை வெளியிடப்பட்டுள்ளது.
இதைப் பார்க்கும்போது 3 ஆயிரம் தொடக்கப் பள்ளிகள் மூடப்படும் நிலை தெரிகிறது. அவற்றை மூடாமல் காக்கவேண்டும். ஒரு நபர் குழுவில் இடை நிலை ஆசிரியர் ஊதியத்தை சரி செய்ய வேண்டும்.இல்லையென்றால்  தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com