அரியலூரில் 160 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு

அரியலூரில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் கர்ப்பிணித் தாய்மார்கள் 160 பேருக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அரியலூரில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் கர்ப்பிணித் தாய்மார்கள் 160 பேருக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
அரசு  தலைமை கொறடா தாமரை எஸ். ராஜேந்திரன் நிகழ்ச்சியை தொடங்கிவைத்து  கர்ப்பிணிகளுக்கு மாலை அணிவித்து தாம்பூலம் தட்டு மற்றும் வளையல்கள் அடங்கிய பொருள்களை வழங்கிப் பேசியது:
இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் பெண்களின் நலனுக்காக ஏராளமான நலத் திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.  கருவுற்ற தாய்மார்கள் அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பதிவு செய்தவுடன் அவர்களுக்கு மூன்று தவணைகளாக ரூ.18,000 நிதியுதவியும், 16 வகையான குழந்தைகள் நலஏஈ பரிசுப் பெட்டகங்களும் அளித்து தாய்மார்களின் நலனைக் காக்கின்ற அரசாக தமிழக அரசு விளங்குகிறது. 
இதுபோன்ற சிறப்பான திட்டங்களின் வரிசையில் தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு செய்யும் நிகழ்ச்சி நடத்தி அவர்களுக்கு ஐந்து வகையான கலவை சாதங்கள் வழங்கி அரசு சார்பில் நடத்தப்படுவது மிகவும் சிறப்பான ஒன்றாகும் என்றார் அவர். இதே போல் மாவட்டத்திலுள்ள 6 ஊராட்சி ஒன்றியங்களில் சமூதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் மு. விஜயலட்சுமி, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் சி. ஹேமசந்த்காந்தி, குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் க. அன்பரசி,கடுகூர் வட்டார மருத்துவ அலுவலர் எம். உமாமகேஸ்வரி, அரசு சிறப்பு வழக்குரைஞர் சாந்தி, அதிமுக நிர்வாகி ஓ.பி. சங்கர் மற்றும் அரசு துறை அலுவலர்கள்,தாய்மார்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஜயங்கொண்டத்தில்...   கங்கைகொண்ட சோழபுரம் கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஜயங்கொண்டம் தொகுதி எம்எல்ஏ ராமஜெயலிங்கம் தலைமை வகித்தார். உடையார்பாளையம் வருவாய்க் கோட்டாட்சியர் ஜோதி  சிறப்புரையாற்றினார். இதில் கலந்து கொண்ட 150 கர்ப்பிணிகளுக்கு வளையல் அணிவித்து சடங்குகள் மற்றும் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. 
ஜயங்கொண்டம் அதிமுக ஒன்றியச் செயலர் கல்யாணசுந்தரம், மாவட்ட துணைச் செயலர் தங்க பிச்சமுத்து, ஜயங்கொண்டம் நகரச் செயலர் செல்வராஜ், மாவட்ட தொழிற்சங்கத் துணைச் செயலர் ஜெய்சங்கர் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.  முன்னதாக குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் மகேஸ்வரி வரவேற்றார். மேற்பார்வையாளர் வாசுகி நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com