கொள்ளிடத்தில் மணல் குவாரிகள்  அமைக்கக் கூடாது: தமிழக ஆளுநரிடம் விவசாயிகள் கோரிக்கை

அரியலூர் மாவட்ட பகுதியிலுள்ள கொள்ளிட ஆற்றில் மணல் குவாரிகள் அமைக்கக் கூடாது என தமிழக ஆளுநர் பன்வாரிலால்

அரியலூர் மாவட்ட பகுதியிலுள்ள கொள்ளிட ஆற்றில் மணல் குவாரிகள் அமைக்கக் கூடாது என தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திடம் விவசாயிகள் கோரிக்கை மனு அளித்தனர்.
அரியலூர் மாவட்டத்தில் ஆய்வுப் பணிகளை மேற்கொண்ட தமிழக ஆளுநரிடம் வியாழக்கிழமை மதியம் சுற்றுலா மாளிகையில் பொதுமக்கள், விவசாயிகள் ஆகியோர் மனுக்களை அளித்தனர். அவற்றில், கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரிகள் அமைக்கும் முயற்சியினை அரசு கைவிட வேண்டும் என பெரும்பாலான விவசாயிகள்  மனு அளித்தனர். மேலும், அரியலூரில் மகாத்மா காந்தி சிலையை நிறுவ வேண்டும். கொள்ளிடத்தின் குறுக்கே கதவணைகளுடன் கூடிய தடுப்பணைகள் கட்ட வேண்டும். கொள்ளிடம் ஆற்றை பாதுகாக்கப்பட்ட குடிநீர் மண்டலமாக அறிவிக்க வேண்டும். திருமானூரை தனி வருவாய் வட்டமாக அறிவிக்க வேண்டும். திருமானூரில் தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும். அரியலூரில் மருத்துவக் கல்லூரி அமைக்க வேண்டும். மருதையாற்றில் தடுப்பணை கட்டி, அதன் உபரிநீரை கரைவெட்டி பறவைகள் சரணாலயத்துக்கு திருப்பிவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com