விரதம், விஷேசங்களால் விலையேறிய வாழைப்பழம்!

கார்த்திகை மாத விரதம் மற்றும் விஷேசங்களால் கரூரில் வாழைப்பழங்களின் விலை பல மடங்கு உயர்ந்தது.
விரதம், விஷேசங்களால் விலையேறிய வாழைப்பழம்!

கார்த்திகை மாத விரதம் மற்றும் விஷேசங்களால் கரூரில் வாழைப்பழங்களின் விலை பல மடங்கு உயர்ந்தது.
கரூர் காமராஜர் மார்க்கெட்டில் இயங்கிவரும் வாழை மண்டிக்கு குளித்தலை, மாயனூர், லாலாபேட்டை, கொடுமுடி, அரவக்குறிச்சி, புகழூர், வேலாயுதம்பாளையம், காட்டுப்புத்தூர், மோகனூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து வாழைப்பழங்கள் கொண்டுவரப்பட்டு ஏலம் விடப்பட்டு பின்னர் விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறன. ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் வாழைப்பழம் வாங்கும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறைந்ததால் கரூர் வாழைக்காய் மண்டியில் 200 பழம் கொண்ட பூவன்தார் ரூ. 50 முதல் 70 வரையிலும், 100 பழம் கொண்ட ரஸ்தாளி தார் ரூ. 150 வரையிலும், 225 பழங்கள் கொண்ட கற்பூர வல்லி ரூ. 60-க்கும், 100 எண்ணிக்கை கொண்ட மொந்தன் ரூ. 90 முதல் 120-க்கும், 100 எண்ணிக்கை கொண்ட பச்சைநாடன் ரூ. 100 வரையிலும் விற்பனையானது. இதனால் விவசாயிகளுக்கு கடும் நஷ்டம் ஏற்பட்டது. இந்நிலையில் வியாழக்கிழமை வாழைப்பழங்களுக்கு கிராக்கி ஏற்பட்டு நல்ல விலைக்குப் போனது.
இதுதொடர்பாக கரூர் வாழைமண்டியைச் சேர்ந்த விபி. முருகையன் கூறுகையில், கடந்த மாதம் மிகவும் மோசமான விலையில் வாழைப்பழங்கள் ஏலம் போயின. விவசாயிகள் வெட்டுக்கூலி கூட கிடைக்காமல் அவதியுற்றனர். ஆனால் இப்போது கார்த்திகை மாதம் தொடங்கிய நாள் முதல் ஏராளமான பக்தர்கள் அய்யப்பசாமிக்கு மாலை போட்டுள்ளதால் கோயில் வழிபாடுகளுக்கு அதிகளவில் வாழைப்பழங்களைத் தார், தாராக வாங்கிச் செல்கிறார்கள்.
மேலும் திருமண விஷேசம், கோயில் விஷேசம் நடைபெறுவதால் தற்போது பூவன் தார் ரூ. 300-க்கும், ரஸ்தாளி ரூ. 320-க்கும், கற்பூரவல்லி ரூ.325-க்கும், மொந்தன் ரூ.350-க்கும், பச்சைநாடன் ரூ. 400-க்கும் ஏலம் போயின. இந்த விலையேற்றம் வாழை விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை உருவாக்கியுள்ளது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com