அபயபிரதான ரெங்கநாதர் கோயிலில் சித்திரை திருவிழா ஏப். 30-இல் தொடக்கம்

கரூர் அபயப்பிரதான ரெங்கநாத சுவாமி கோயில் சித்திரை திருவிழா வரும் 30-ஆம் தேதி தொடங்கி மே 13-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

கரூர் அபயப்பிரதான ரெங்கநாத சுவாமி கோயில் சித்திரை திருவிழா வரும் 30-ஆம் தேதி தொடங்கி மே 13-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
சேரர் கொங்கு எனப்படும் கரூரில் அமராவதி ஆற்றின் வடகரையில் வேதவியாசர் தவச்சாலை அமைத்து வாழ்ந்ததாக கருதப்படும் கரூர் அபயப்பிரதான ரெங்கநாத சுவாமி கோயில் சித்திரைத் திருவிழா வரும் 30-ஆம் தேதி தொடங்குகிறது. விழா கொடியேற்றம் மே 1-ஆம் தேதியும், இதைத்தொடர்ந்து வரும் விழா நாள்களில் ஹம்ஸ வாகனம், ஹனுந்த வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் சுவாமி திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும். 9-ஆம் தேதி தேரோட்டமும், 10-ஆம் தேதி அமராவதி நதியில் தீர்த்தவாரியும் நடக்கிறது. 13-ஆம் தேதி ரெங்கநாதசுவாமிக்கும் , கல்யாணவெங்கடரமண சுவாமிக்கும் புஷ்பயாகம் நடக்கும் நிகழ்வுடன் விழா நிறைவு பெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com