பரத நாட்டியத்தில் கின்னஸ் சாதனை: கலைஞர்களுக்கு பாராட்டு

பரத நாட்டியத்தில் கின்னஸ் சாதனை படைத்த நாட்டிய கலைஞர்களுக்கு பாராட்டு விழா கரூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பரத நாட்டியத்தில் கின்னஸ் சாதனை படைத்த நாட்டிய கலைஞர்களுக்கு பாராட்டு விழா கரூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
 கடந்த 14-ஆம் தேதி சென்னை பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் கல்லூரியில் கின்னஸ் சாதனைக்கான பரத நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், மலேசியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த பரதநாட்டிய கலைஞர்கள் பங்கேற்றனர்.
இதில் திண்டுக்கல்லைச் சேர்ந்த ஆடவல்லான் இசையாலயம் பள்ளியின் தலைவர் நவஅதிஷ்டபாலன் தலைமையில் 4,525 கலைஞர்கள் மற்றும் நாட்டிய குழந்தைகள் ஒரே இடத்தில் நின்று திருக்குறள் பாடலுக்கு ஏற்ப நடனம் நாடி கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தனர். இதற்கு முன்பாக உத்தரப்பிரதேச மாநிலத்தில் கடந்த 2015-இல் 2100 பேர் மட்டும் பங்கேற்ற போட்டி தான் கின்னஸ் சாதனையாக இருந்தது.
சாதனை படைத்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா கரூரில் நடனாஞ்சலி நாட்டியாலயா சார்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் கரூர் நடனாஞ்சலி நாட்டியாலயா நிர்வாக இயக்குநர் ராஜேஷ், சாலினிராஜேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com