எல்ஐசி பிரீமியத்திற்கு ஜிஎஸ்டி-யை ரத்துசெய்ய முகவர்கள் வலியுறுத்தல்

எல்ஐசி பிரீமியத்திற்கு ஜிஎஸ்டி-யை ரத்துசெய்ய வேண்டும் என கரூரில் சனிக்கிழமை நடைபெற்ற எல்ஐசி முகவர்கள் சங்க மகாசபைக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

எல்ஐசி பிரீமியத்திற்கு ஜிஎஸ்டி-யை ரத்துசெய்ய வேண்டும் என கரூரில் சனிக்கிழமை நடைபெற்ற எல்ஐசி முகவர்கள் சங்க மகாசபைக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
சங்கத்தின் கரூர் மாவட்டத் தலைவர் ஏ. தங்கவேல் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் செயலாளர் கே. ராமச்சந்திரன் வரவேற்றார். பொருளாளர் ஜிஎன்எஸ் மூர்த்தி வரவு- செலவு அறிக்கை வாசித்தார். தென்மண்டலச் செயலாளர் பி. வீரண்ணன், தூத்துக்குடி சகாயராஜன் பெர்ணாண்டோ ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகப் பங்கேற்று பேசினர். இதில், தென்மண்டல இணைச் செயலாளர் கே. பாலசுப்ரமணியன், அகில இந்திய செயற்குழு உறுப்பினர் வி. செல்வகணேசன், தஞ்சை கோட்டச் செயலாளர் பி. கோகுலகிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
கூட்டத்தில், எல்ஐசி பாலிசிதாரர்களுக்கு போனஸ் தொகையை உயர்த்த வேண்டும். பணிக்கொடையை ரூ. 3 லட்சத்தில் இருந்து ரூ. 10 லட்சம் என உயர்த்த வேண்டும். முகவர்களுக்கு ஊதியம், ஓய்வூதியம், மருத்துவக் காப்பீடு வழங்க வேண்டும். குழு காப்பீட்டுத் திட்ட வயதை 80 ஆக உயர்த்த வேண்டும். எல்ஐசி பிரிமீயம் மற்றும் காலதாமத கட்டணத்திற்கு ஜிஎஸ்டிஐ உடனே ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com